(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

என்னை வேலை வாங்கறாரோ அதே போல இவள்ட்டயும் நான் வேலை செய்யனும். இதுல இவள் ஒரே பொண்ணு வேற அவளோட பிசினஸ்க்கும் அவள் ஒரே வாரிசு இங்க நம்ம கம்பெனிக்காக உழைச்சது போதாதுன்னு இனி அவளோட கம்பெனியில நடக்கற மீட்டிங் டீலிங்குக்கும் நான் போயாகனும் அவளோட கம்பெனிக்காகவும் உழைச்சாகனும்”

   

“அதுக்கென்ன உன் மனைவிக்காக இதுகூட செய்ய மாட்டியா”

   

“தாராளமா செய்றேன் பதிலுக்கு அவள் வீட்டுக்குள்ளயே இருப்பாளான்னு சொல்லுங்க ரெண்டு பிசினஸ்னையும் ஒண்ணாவே பார்த்துக்கிறேன்”

   

“அதை பத்தி விசாரிக்கிறேன் ஒருவேளை அவள் வீட்டுக்குள்ள இருக்க சம்மதிச்சா உன் முடிவு என்ன”

   

“இப்பதானே அவளே வந்தா அதுக்குள்ள முடிவு கேட்டா எப்படி”

   

“சரி சரி முதல்ல பேசலாம் அப்புறம் உன் முடிவு சொல்லு”

   

“அதுக்கு இன்னும் 1 மாசம் இருக்கு”

   

“நடுவுல அவளே போகலாம் நாம கூட அனுப்பி வைக்கலாம்”

   

“அவளே போறது நல்லது. நாமளே அனுப்பினா புதுசா ஒரு எதிரியை நாமளே சொந்த செலவுல ஏற்படுத்திக்கிட்ட மாதிரியிருக்கும்”

   

“நீ சொல்றதும் சரிதான் இவள்கிட்ட நான் பார்த்து பக்குவமா பேசறேன் கவனி” என ரிஷியிடம் சொல்லிவிட்டு வந்த பெண்ணை பார்த்தார் தாத்தா.

   

மற்றவர்களும் அந்த பெண்ணைப்பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

   

”அண்ணாவுக்கு ஏத்த பொண்ணு இவள்தான் என்ன சொல்ற” என கருணாகரன் கேட்க 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.