(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“என்னை நீ தாத்தான்னே கூப்பிடலாம்”

   

“ஓகே தாத்தா”

   

“ம் உன்னை பத்தியும் உன் அப்பா பத்தியும் மோகன் நிறைய சொல்லியிருக்கான். அவனே உன்னை கூட்டிட்டு வந்ததால எதை நினைச்சும் சந்தேகப்பட தேவையிருக்காது எனக்கு. அழகு, அறிவு, ஆஸ்தி எல்லாமே உன்கிட்ட நிறையவே இருக்கு. நீ ஒருத்தி மட்டும் வந்திருந்தா நான் யோசிக்காம உன்னையே என் பேரனுக்கு பேசி முடிச்சிருப்பேன் ஆனா இப்ப நிலைமை வேற உன்னோட சேர்ந்து இன்னும் சில பெண்கள் வரப்போறாங்க அவங்களோட நீயும் தங்கனும் நடக்கப்போற போட்டியில கலந்துக்கிட்டு ஜெயிக்கனும் நிறைய இருக்கு உனக்கு இதுல ஆட்சேபனையில்லையே”

   

“சத்தியமா இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்க போறவருக்கும் எந்தளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கனும்னு நான் நினைச்சேனோ அந்த அளவுக்கு இருக்கு. அவருக்காக ஒருத்தி வந்தா அது ரொம்ப இயல்பான விசயம் அதே அவருக்காக பல பெண்கள் க்யூல நின்னு அதுல நான் ஜெயிச்சாதான் அது எனக்கு பெருமை”

   

“வர்ற மற்ற பெண்களோட போட்டி போட்டு உன்னால ஜெயிக்க முடியும்னு நினைக்கிறியா”

   

“கண்டிப்பா உண்மையை சொல்லனும்னா நான் ரிஷியை பார்த்து இங்க வரலை நீங்க நடத்தற இந்த வித்தியாசமான போட்டியில கலந்துக்கனும்னு தான் நான் வந்தேன். எனக்கு அட்வென்ச்சர்ன்னா ரொம்ப பிடிக்கும்.”

   

”ஓ இதை வெறும் ஒரு விளையாட்டாதான் நினைக்கற அப்படித்தானே”

   

“ஆமாம்” என்றாள் உறுதியாக

   

”இந்த போட்டியில நிறைய விதிமுறைகள் இருக்கு”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.