மாதம் எப்படி சமாளிக்க போகிறோம் என்று கலங்கிய இந்துவிற்கு உதவி செய்வது போல், அவினாஷின் பிஸ்னஸ் ட்ரிப் வந்து சேர்ந்தது!
அவினாஷ் பிஸ்னஸ் சம்மந்தமாக சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்தது. மனைவியை விட்டு விட்டு தனியாக செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. லக்ஷ்மியும் குழந்தை ரோஷினியை தான் கவனித்து கொள்வதாக சொல்லி வீணாவை அவினாஷுடன் சென்று வர வற்புறுத்தினாள்.
இந்துவின் திருமண ஏற்பாடு நடக்கும் நேரத்தில் வெளிநாடு ட்ரிப் செல்ல தயங்கிய வீணாவை அர்ச்சனா, லக்ஷ்மி, கீதா, இந்து என அனைவரும் சமாதானப் படுத்தினர்.
ஆனாலும் வீணாவிற்கு தயக்கமாக தான் இருந்தது! இந்துவுடன் இருந்து அனைத்து திருமண ஷாப்பிங்கிற்கும் அவளுடன் சென்று எல்லாவற்றையும் செலக்ட் செய்ய உதவ வேண்டும் என்று வீணாவிற்கு மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்காக அவினாஷை பிரிந்து இருக்கவும் மனம் வரவில்லை. முடிவெடுக்க முடியாமல் தடுமாறினாள் அவள்!
"வீணா, அவினாஷ் தான் சொல்றார்ல எப்படியும் இந்து கலயாணத்துக்கு முன்னாடியே வந்திரலாம்னு! அப்புறம் என்ன? அவரை தனியா அனுப்பிட்டு அப்புறம் இங்கே உட்கார்ந்து புலம்ப போறீயா?? இந்துவுக்கு நாங்க எல்லோரும் இருக்கோம். நாங்க எல்லாம் பார்த்து செய்றோம். உனக்கும் பிக்சர்ஸ் எல்லாம் நான் அனுப்புறேன். உன் டெசிஷன் தெரிஞ்சப் பிறகு தான் எல்லாத்திலேயும் முடிவு எடுப்போம்,” என கீதா சொல்லவும், வீணாவின் மனதில் இருந்த குழப்பம் சற்றே விலகியது.
கீதா சொல்வதும் சரி தானே! அவினாஷுடன் போய் விட்டு திருமணத்திற்கு முன் வந்து விடலாம். ஷாப்பிங் மட்டும் தான் மிஸ் செய்ய வேண்டி இருக்கும் ஆனால் கல்யாண நிகழ்சிகள் அனைத்திலும் பங்குக் கொள்ளலாம்! ஒரு வழியாக அரை மனதுடன் அவினாஷுடன் கிளம்பி சென்றாள் வீணா.
இந்துவிற்கு வீணா அப்படி சிங்கப்பூர்
{/f90filter}சென்றது மிகவும் வசதியாகவே இருந்தது. கீதாவால் வீணாவை போல் அவ்வபோது அவளை நேரே சந்திக்க வர முடியாது! வீணா மட்டும் சென்னையிலேயே இருந்திருந்தால் அவளிடம் உண்மையை மறைக்க இந்து பெரும் பாடு பட