(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

ஒரு பக்கம் சஞ்சீவின் பாரா முகம் அவளை மிகவும் வேதனை படுத்தியது! 

   

மறு பக்கம் இவ்வளவு நாள் அவளின் கனவுகளை கண் முன் கொண்டு வர செய்த எஸ்.எ இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் அவளை விட்டு செல்ல போகும் சிறு வருத்தம்! 

   

இன்னொரு பக்கம், இன்னும் சில நாட்களில் அம்மாவை பிரிந்து போக வேண்டும், அதன் பின் சஞ்சீவ் மனம் மாறும் வரை விரும்பிய நேரத்தில் அம்மாவிடம் பேசவோ நேரில் சந்திக்கவோ முடியாது என்ற எண்ணம்! 

   

இத்தனையையும் மனதில் வைத்துக் கொண்டு வெளியே எதையும் காட்டாமல் புழுங்கிக் கொண்டிருந்தாள் இந்து. 

   

காலை உணவு உண்ணும் போது முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக இருந்த இந்துவை பார்த்து அர்ச்சனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

   

"இந்து, என்ன விஷயம்? கொஞ்ச நாளாவே எப்படியோ இருக்க? கல்யாண பொண்ணுக்கான களையே முகத்தில் காணும்??? சின்ன சிரிப்பு கூட இல்லை! என்னடா ஆச்சு??? "

   

அர்ச்சனாவின் அக்கறை கலந்த கேள்விக்கு இந்து பதில் சொல்லும் முன் கனகா குறுக்கிட்டு,

   

"என்னம்மா நீங்க! நம்ம இந்து அம்மாக்கு சந்தோஷம் எல்லாம் ஒரு குறையும் இல்லை. உங்களை நினைச்சு தான் அவங்களுக்கு கவலை. நேத்து கூட என்கிட்டே வந்து உங்களை நேரத்துக்கு சாப்பிட வைக்கனும், மருந்து கொடுக்கனும் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க," என்றாள்.

   

"அப்படி இப்படின்னு சொன்னேனா??? நல்லா தான் இருக்கு நீங்க ந

{/f90filter}

ான் சொன்னதை கவனிச்ச லட்சணம்," என கனகாவிடம் கேட்ட மகளின் கேசத்தை அன்புடன் வருடிய அர்ச்சனா,

   

"என்னடா செல்லக் குட்டி, என்னை நான் கவனிச்சுக்க மாட்டேனா? பாவம் கனகாவை ஏன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.