(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஆமாம் அத்தான். பாவம் இந்து அக்கா, உங்களை பார்க்காம நூடில்ஸா இளைச்சு போயிட்டாங்க," என்று தன் பங்கிற்கு சொன்னாள் கண்மணி.

   

காஞ்சனா போல அல்லாமல், இந்துவை மைய்யப் படுத்தி கீதாவும் கண்மணியும் பேசவும், சஞ்சீவின் மனம் தடுமாறியது! என்ன தான் இந்துவை அவனுக்கு இப்போது பிடிக்க வில்லை என்றாலும் (!!!), கீதாவும், கண்மணியும் இந்துவிற்காக உடன் வர சொல்லி அழைத்தப் போது, உடனே மறுக்க சஞ்சீவிற்கு மனம் வரவில்லை. இந்துவை அவன் பார்த்தும் கிட்டத்தட்ட ஒரு மாதமாகி இருந்தது! இந்த எண்ணம் தோன்றிய உடனேயே அவளை நேரில் பார்க்கும் ஆசை அவனின் மனதில் மெல்ல ஊற்றெடுக்க ஆரம்பித்தது. 

   

எப்படியும் திருமணத்திற்கு பிறகு தினமும் இருவரும் நேரில் சந்தித்து சமாளிக்க தானே வேண்டும், இப்போது சந்தித்தால் என்ன, என தனக்கு தானே ஒரு காரணத்தையும் சொல்லிக் கொண்டான் சஞ்சீவ்.

   

"சரி நான் வரேன்! இந்த ஒரே ஒரு நாள் தான்! அதுவும் நீங்க எல்லோரும் இவ்வளவு கம்பல் செய்றதால தான் வரேன்," என்றான்.

   

என்ன தான் ‘கெத்தாக’ அதை சஞ்சீவ் சொன்னாலும் கீதாவின் கேலி பார்வையை சந்திக்க முடியாமல் அங்கிருந்து உடனே நழுவிச் சென்றான்!

   

 🌼🌸❀✿🌷

   

மறுநாள் திருமண சேலை எடுக்க கடைக்கு செல்ல வேண்டும் என அர்ச்சனா சொன்ன போது இந்து பெரிதாக எந்த பரபரப்பும் கொள்ளவில்லை. எப்படியும் சஞ்சீவ் இதற்கும் வர மாட்டான் என்று மனதில் நம்பினாள். 

   

இப்போதெல்லாம் அவள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கம்பெ

{/f90filter}னிக்கு சென்று நிர்வாகத்தை மேற்பார்வை இட்டாள். முடிந்த அளவில் நந்தினியையே எல்லா முடிவுகளையும் எடுக்க சொன்னாள். நந்தினிக்கு அதில் ஆச்சர்யம் தான் என்றாலும், அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.