(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

கீதா அந்த புடவையை இந்துவின் மீது வைத்துப் பார்த்தாள். இந்துவிற்கும் அந்த சேலை பிடித்திருந்தது! ஆனால் சஞ்சீவிற்கு பிடிக்குமோ என்னவோ, என்ற எண்ணத்துடன் தன் முன் இருந்த கண்ணாடியைப் பார்த்தவள், அங்கே இமைக்காமல் அவளையே பார்த்தப்படி நின்றிருந்த சஞ்சீவின் பிம்பம் தெரியவும், மூச்சு விடவும் மறந்து சிலையென நின்றாள்! 

   

சஞ்சீவிற்கும் அந்த சேலை பிடித்திருப்பதை அவனின் பார்வையே சொல்லி விட, இந்துவின் முகத்தில் வெட்கத்தின் சாயல் எட்டிப் பார்த்தது! அதன் காரணமாக அவளின் கன்னங்களும் மெல்ல சூடாகி சிவந்தது!

   

இந்துவையும் சஞ்சீவையும் மாறி மாறிப் பார்த்த கீதா, 

   

"சரி தான்! ஹீரோ ஹீரோயினுக்கு சாரீ  பிடிச்சிருச்சு போலருக்கு!!!" என்றாள் முகம் மலர! 

   

கையிலிருந்த சேலையை கடை சிப்பந்தியிடம் கொடுத்து முன்பு தேர்வு செய்திருந்த சேலைகளுடன் வைக்க சொன்ன கீதா, அப்படியே இந்துவிடம், "இந்து, இன்னும் ஒரு மாசத்துக்கு உன்னை சஞ்சீவ் கிட்ட காட்டாம மறைச்சு தான் வச்சிருக்கனும் போலருக்கு! அப்படியே பார்த்தே உன்னை விழுங்கிடுவார் போல இருக்கு," என்றாள் இந்துவிற்கு மட்டும் கேட்கும் ரகசியக் குரலில்!

   

கீதாவின் கேலியை கேட்டு புன்னகைத்த இந்துவின் முகம் மேலும் சிவந்தது! வெட்கம் நிறைந்த அவளின் முகம் அதிக அழகுடன் பளிச்சிட்டது! 

   

இமைக்க மறந்து இந்துவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சஞ்சீவ்! பொது இடத்தில் இருக்கிறான்... இந்துவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்... என்ற இத்தியாதி இத்தியாதி எண்ணங்கள் சஞ்சீவிற்குள் வர தான் செய்தது! ஆனாலும் அவனால் அவ

{/f90filter}ளை விட்டு தன் பார்வையை அகற்ற முடியவில்லை! அவளையே பார்த்தபடி நின்றான்!!!

   

அங்கே நடைப்பெற்றுக் கொண்டிருந்த காதல் ட்ராமா அர்ச்சனா, காஞ்சனா கண்களிலும் பட்டது!

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.