காரில் வீடு திரும்பும் போது அனைவரும் கலகலப்பாக பேசியப்படி வர, சஞ்சீவ் அமைதியாகவே காரை ஓட்டினான். தப்பி தவறி கூட இந்து இருந்த பக்கம் அவன் பார்வையை திருப்பவில்லை!
ஆனால், சமயம் கிடைத்த போதெல்லாம் சஞ்சீவ் பக்கம் பார்த்தாள் இந்து! அவனோ அவள் பக்கமே பார்க்காமல் கவனமாக வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். அவளுக்குள் ஏமாற்றம் தோன்றியது!
இந்துவின் வீடு வந்ததும், காஞ்சனா அப்படியே கிளம்புவதாக சொன்னதை அர்ச்சனா ஏற்றுக்கொள்ளவில்லை! அர்ச்சனாவின் வற்புறுத்தலுக்காக அனைவருமே காரில் இருந்து இறங்கி வீட்டின் உள்ளே வந்தார்கள்.
அர்ச்சனா கனகாவிடம் சிற்றுண்டி தயாரிக்க சொல்ல உள்ளே செல்ல, காஞ்சனாவும் அவள் உடன் சென்றாள். இந்துவையும் சஞ்சீவையும் சிறிது நேரம் தனிமையில் விட விரும்பிய கீதா,
"கண்மணி, நான் அன்னைக்கு சொன்னேனே ஆரஞ்ச் கலர் ரோஸ் பார்க்கலாம் வர்றீயா?" என்று கண்மணியை அழைத்தாள்.
கண்மணியும் சந்தோஷத்துடன் அவளுடன் கிளம்பினாள்.
"நானும் வரேன் கீதா அக்கா," என்று சொல்லி இந்துவும் அவர்களுடன் கிளம்பவும்,
"இல்லை இந்து, சஞ்சீவ் பாவம் அப்புறம் தனியா இருப்பார். நீ அவர் கூட பேசிட்டு இரு. நான் கண்மணிக்கு பூவை காட்டிட்டு வரேன்," என்று சொல்லிவிட்டு, உண்மையான காரணத்தை சொல்ல, இந்துவிற்கு மட்ட
{/f90filter}
ும் தெரியுமாறு கண்ணை சிமிட்டி விட்டு சென்றாள் கீதா.
அவர்கள் இருவரும் சென்றதும் சஞ்சீவ் அமர்ந்திருந்த ஷோஃபாவின் எதிரே இருந்த ஷோஃபாவில் அமர்ந்தாள் இந்து.