இருவரும் தங்களுக்குள் புரிந்துக் கொண்ட சின்னப் புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள்!
"கொஞ்ச நாளாவே சஞ்சீவ் ஒரு மாதிரியா இருந்தான். என்னவோன்னு நினைச்சேன். இங்கே வந்து என் மருமகளை கண்ணுல பார்த்ததும் அவனுக்கு எல்லாமே சரியாகிப் போச்சு. ஆனால் இங்கே புடவை எடுக்க அவனை வரவழைக்க எவ்வளவு கஷ்டப் பட்டோம் தெரியுமா! ரொம்ப கஷ்டப் பட்டு அவனை பிடிச்சு இழுத்துட்டு வர வேண்டியதா இருந்தது."
காஞ்சனா அர்ச்சனாவிடம் சொன்னது மெல்லியதாக சஞ்சீவின் காதிலும் விழுந்தது!
சட்டென்று அவனின் அறிவு (!!! :-) ) கண் விழித்துக் கொண்டது!
காஞ்சனாவின் பேச்சிற்கு பதிலாக அர்ச்சனா என்னவோ சொல்வது அர்த்தமற்ற ஒலியாக தான் அவனுக்கு கேட்டது! சொற்கள் ஒன்றும் புரிபடவில்லை! ஏனென்றால், அவன் திகைத்துப் போய் ‘ஸ்டன்’ ஆகி நின்றிருந்தான்!!!!
அவன் இந்துவிடம் போட்ட நிபந்தனைகள் என்ன! அவளிடம் பேசிய வசனங்கள் என்ன?? இன்று இங்கே செய்துக் கொண்டிருப்பது என்ன!!!!
இந்துவை நேரில் பார்த்ததுமே அவனின் மனம் தன் வசமிழப்பது அவனுக்கு தெளிகாகப் புரிந்தது!
அவனுடைய கோபம் எங்கே போனது? அவளிடம் அவன் கோப பட்ட காரணம்... அது என்ன காரணம்....???
சஞ்சீவ் தீவிர சிந்தனையில் இருக்கும் போது,
{/f90filter}
"என்ன அத்தான், கனவுல இந்து அக்கா கூட டூயட் பாடுறீங்களா என்ன? வாங்க பில் போட்டாச்சு கிளம்பலாம்," என சொல்லி கண்மணி அவனின் சிந்தனையை கலைத்தாள்!
🌼🌸❀✿🌷