(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அதுவே ஒரு பொண்ணுக்காக கஷ்டப்பட்டு பெரியாளாகி அவள் பெற்றவங்க கிட்ட சம்மதம் வாங்கி இல்லை உன் பெற்றவங்க கிட்ட சம்மதம் வாங்கி ஊர் மெச்ச நீ கல்யாணம் பண்ணா அதான் சிறப்பு, என்னிக்கும் உன் கல்யாண வாழ்க்கை நிலைச்சி நிக்கும், ஒரு பயலும் உன்னையோ அந்த பொண்ணையோ தப்பா பேசமாட்டாங்க. புத்திசாலியா இருக்க பாரு. நீ எடுக்கற முடிவால யாருக்கும் களங்கம் வரக்கூடாது. 

   

நாங்க இருக்கோம்ல நான் கீர்த்தனாவை பார்த்துக்கறேன், நீ உன்னை சுத்தியிருக்கற பிரச்சனைகளை சரி பண்ணு. அதுக்கப்புறம் நல்ல நாள் பார்த்து கல்யாணம் பத்தி பேசலாம். அதுக்குள்ள உன் குடும்பமும் உன்னை புரிஞ்சிக்கிட்டு உனக்கு நல்லது செய்ய நினைப்பாங்க.” என சொல்ல தேவாவுக்கும் தாசுக்கும் அது சரியெனபட்டது. உடனே

   

”சரி நீங்க சொன்ன மாதிரியே நான் செய்றேன் அப்ப நான் கிளம்பறேன்”

   

“நீ ஏன் போற இங்கயே தங்கு”

   

“இல்லை இங்க தங்கறது சரியா வராது அடிக்கடி நான் ஹாஸ்டல் கட்டற விசயமா வெளிய போகனும், நேரத்துக்கு வரமுடியாது. நீங்க போடற கன்டிஷன் என்னால சரியா செய்ய முடியாது. அதனால நான் பண்ணை வீட்ல தங்கிக்கிறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்த வசந்தனிடம்

   

”உன் ரூம்ல என் லக்கேஜ் இருக்கு கொண்டா” என சொல்ல அவனும் உடனே சென்றான்.

   

கீர்த்தனாவோ

   

”எங்க சாப்பிடுவீங்க எப்படி இருப்பீங்க”

   

“பார்த்துக்கலாம் கீர்த்தனா கொஞ்ச நாள்தானே, எல்லா பிரச்சனையும் முடியனும்”

   

“பவி என்ன ஆனா“

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.