(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“சொல்றேன் உனக்கு சரண்யாவை தெரியுமா”

   

“கேள்விப்பட்டேன். ஊரெல்லாம் அதைப்பத்திதான் பேச்சு, அந்த பொண்ணு பையன் வேஷம் போட்டு தேவா வீட்டு மானத்தை வாங்கிட்டாளாமே”

   

“அதேதான் அவளுக்கு தேவா வேணும், உனக்கு கீர்த்தனா வேணும், அவளோட நீ சேர்ந்துட்டா நீ நினைச்சது கிடைக்கும், அவள் நினைச்சது கிடைக்கலைன்னா போகுது நீ என்ன சொல்ற” என  சொல்ல அவனோ சந்தோசப்பட்டான்

   

”ஆனா அந்த சரண்யாதான் போயிட்டாளே”

   

”அவளை நான் பார்த்திருக்கேன், அவள் கோழை போல ஓடறவ கிடையாது, நிச்சயம் தேவாவுக்காக அவள் திரும்பி வருவா அப்ப அவளோட நீ கைகோர்த்திட்டேன்னு வையேன், உன் காதல் உனக்கு கிடைக்கும் என்ன சொல்ற”

   

“இதுவும் நல்ல திட்டம்தான், நான் எப்படியாவது சரண்யாவை பிடிக்கறேன் அவளோட நெம்பரை எப்படியாவது பிடிச்சி பேசறேன்”

   

“சரி ஒரு விசயம் உனக்கு துணையா நான் இருக்கற விசயம் யாருக்கும் சொல்லக்கூடாது”

   

”கண்டிப்பா சொல்லலை”

   

“சரண்யா நெம்பர் கிடைச்சா போன் பண்ணி பேசு, அவள் தங்கறதுக்கு என் வீடு இருக்கு அங்க வந்து விடு”

   

“அவள் அங்க வந்தா கீர்த்தனாவை வாழ விடமாட்டாளே”

   

“ஆமாம் அந்த வீட்ல தாமரை கூட கீர்த்தனா இருக்கறவரைக்கும் அவள் நிழலை கூட உன்னால தொடமுடியாது சரண்யாவால கீர்த்தனா வெளிய போனா உனக்குத்தானே லாபம்”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.