2 நாட்கள் அவன் எங்கெங்கோ சென்று போராடி பார்த்தும் அவனால் இழந்ததை மீட்க முடியாமல் போனது.
ஒர்கஷாப்பும் சீல் வைக்கப்பட்டது. இதில் தேவாவின் நிலைமை அவனது தாத்தா வீட்டுக்கு தெரிய வந்தும் அவர்களால் முயன்ற அளவுக்கு உதவ செய்ய வந்தும் முடியாமல் போகவே இறுதியில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தை யாராவது எடுத்தால் என்னாகுமோ என யோசித்த தேவா நல்லவேளையாக அந்த லாரி ட்ரான்ஸ்போர்ட் மற்றும் ஒர்க்ஷாப் இரண்டுமே அவனது தந்தை கைலாசமே எடுத்துக் கொள்ளவும் நிம்மதியானான். ஏலத்தில் தனது வேலை பறி போனாலும் கவலைப்படாமல் இருந்தவனுக்கு தாமரையிடம் இருந்து கவலையான ஒரு போன் வந்தது
”தேவா” என தாமரை கவலையாக அழைக்க
”என்னாச்சி தாமரை”
“தப்பாயிடுச்சிப்பா”
“என்னாச்சி”
“நான் கோயிலுக்கு போன சமயம் பார்த்து வீட்டுக்கு சரண்யாவும் பவியும் வந்தாங்க. கீர்த்தனாகிட்ட என்ன பேசினாங்க என்ன சொன்னாங்க எதுவும் தெரியலை நான் திரும்பி வந்து பார்த்தப்ப அவள் வீட்ல இல்லை”
“என்ன சொல்ற தாமரை, உன்னை நம்பி தானே விட்டேன் ஆமா இந்த பவி ஏன் அங்க வந்தா”
“மித்ராவை பார்க்கவாம்”
“சரி சரண்யா ஏன் வந்தா”
Next episode pls