(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அவனும் சரியென சொல்ல அவள் உடனே அவனுக்கு பல கட்டளைகளை பிறப்பித்தாள். அதன் படி அவன் முதலில் காலேஜ் ஓனரை தேடிச்சென்றான்.

   

அங்கு தேவா காலேஜ் ஒனரிடம் பேச அவர் சம்மதிக்காமல் முரண்டு பிடித்தார்

   

”இதப்பாரு தேவா எனக்கு அந்த பொண்ணா பையனாங்கறது பிரச்சனையில்லை எனக்கு அது தேவையும் இல்லை. எனக்கு தேவை அந்த ப்ளான்தான் அதே போலதான் கட்டிடம் கட்டனும் வேற ப்ளான் தேவையில்லை”

   

“ஒரு முறை நான் காட்டற ப்ளான் பாருங்க பிடிக்கும்”

   

“இல்லைப்பா இல்லை நான் அந்த பொண்ணு வீட்லயே பேசிக்கிறேன், நீங்க அக்ரிமெண்ட் கேன்சல் பண்ணா எனக்கென்ன நான் புதுசா அக்ரிமெண்ட் போடறேன்”

   

“அவள் வரமாட்டா அவ்ளோதான் அவள் போயிட்டா” என தேவா சொல்ல பின்னாடியே சரண்யாவே வந்து நின்றாள்

   

”நான் எங்கயும் போகலை” என சொல்லியபடியே வந்து நிற்கவும் அதிர்ந்தான் தேவா, அவள் கூடவே விக்ரம் இருப்பதைக் கண்டு அதிர்ந்தவன் தாஸை பார்க்க அவனோ குழம்பினான்.

   

”சார் நான் வரைஞ்ச ப்ளான் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னா ஏன் நாம ரெண்டு பேரும் கைகோர்க்க கூடாது. என் தாத்தா அப்பாவை பத்தி உங்களுக்குத் தெரியும், நான் இந்த வேலையை முடிச்சித்தரேன்” என சரண்யா சொல்ல காலேஜ் ஓனர் ஒப்புக் கொள்ளவும் தேவா

   

”சார் நான் சொல்றதை கேளுங்க சார் இவளை நம்பாதீங்க சார்” என அவன் பேச காலேஜ் ஓனர் 

   

”போதும்பா இனி நீ கிளம்பலாம், இது சம்பந்தமா இனி நீ என்கிட்ட வரவேணாம் போ” என சொல்ல அவனோ ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியே வந்து கார் பார்க்கிங்கில் தன் கார் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.