பக்கம் வந்து நின்றுக் கொண்டான். தாஸும் அவனிடம்
”சரண்யா விக்ரம் எப்படி” என கேட்க
”எதிரிக்கு எதிரி நண்பன் ஆயிட்டாங்க போல, சரண்யாவுக்கு நான் வேணும், விக்ரமுக்கு கீர்த்தனா வேணும், ரெண்டும் சேர்த்திருக்கு என்ன பிரச்சனை வருமோ தெரியலை” என சொல்லும் போதே தேவாவின் செல்போன் அலறியது.
”ஹலோ சொல்லுங்க மேனேஜர் என்ன விசயம்” என கேட்க அவர் சொன்ன தகவல் அவனை அதிர்ச்சியடைய வைத்தது
”என்ன சொல்றீங்க இன்கம்டக்ஸ் ரைடா ஆனா நாம எல்லா கணக்கு வழக்கையும் சரியா வைச்சிருந்தோமே அப்புறம் என்ன” என கேட்க மறுபக்கம் சொன்ன தகவலால் கண்கள் சிவக்க கோபத்துடன் போனை கட் செய்தான் தேவா அந்நேரம் விக்ரம் வெளிய வந்தான்
”என்ன தேவா உன் கம்பெனியல இன்கம்டாக்ஸ் ரைட் போல”
“பாவி நீயெல்லாம் ஒரு நண்பனாடா, உன்னை நம்பி கணக்கு வழக்கு பார்க்க சொன்னா இப்படியா செய்வ”
“நான் எதையும் செய்யலை எல்லாம் செஞ்சது பவிதான், உன் மேல இருக்கற கோபத்தில அவள் அந்த அக்கவுண்ட்ஸ் எல்லாம் நெருப்பில பத்தி வைச்சிட்டா, எந்த கணக்கும் இல்லாத மாதிரி செஞ்சிட்டு இன்கம்டாக்ஸ்க்கு போன் பண்ணி சொல்லிட்டா, இப்ப பாரு உன் ட்ரான்ஸ்போர்ட் மொத்தம் காலி சீல் போட்டாச்சாம். இப்ப எப்படி உன்னால அதை மீட்க முடியும்” என சொல்லி சிரிக்க சரண்யா வந்தாள்
”தேவா இப்பவும் குறைஞ்சிப் போகலை, என்னை ஏத்துக்க, நீ இழந்த எல்லாமே உனக்கு திரும்பவும் கிடைக்கும் நான் செய்றேன்”
“முடியாது” என நக்கலாக சிரித்துவிட்டு காரில் ஏறி தாஸுடன் இன்கம்டாக்ஸ் ஆபிசுக்குச் சென்றான். அங்கு எவ்வளவு சொல்லியும் தேவாவை அவர்கள் நம்ப மறுத்தார்கள்.
Next episode pls