(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அவளை வெளிய விரட்டியாச்சி அவ்ளோதான்” என பவி சொல்லிக் கொண்டே தன் அண்ணன்  விக்ரமிடம் வந்து நின்றாள்

   

”பாவி கீர்த்தனா பாவம் அவளை ஏன் விரட்டின”

   

“அவளாலதான் என் காதல் எனக்கு கிடைக்கலை. அவள் எதுக்கு உனக்கு, என்னால அவளை அண்ணியா நினைக்க முடியாது, அதான் விரட்டினேன்” என சொல்ல சரண்யா வந்தாள்

   

”சாரி விக்ரம் கீர்த்தனாவுக்கு உன்னை பிடிக்கலை, நீ அவளுக்கு தகுதியானவே கிடையாது. அவள் இருந்தா தேவா எனக்கு கிடைக்க மாட்டான், அதான் நாங்க திட்டி விரட்டிட்டோம் நீ வேற பொண்ணை பார்த்துக்க” என சொல்லிவிட்டு தேவாவிடம் வந்தாள் சரண்யா

   

”தேவா என்னை ஏத்துக்க, நீ இழந்த எல்லாம் உனக்கு கிடைக்கும்”

   

“போடி நான் பிச்சையே எடுத்தாலும் உன்கிட்ட நான் வரமாட்டேன்”

   

“இப்பவும் நீ பிச்சைதான் எடுக்கற, உன்னோட குடும்பம் உன்னை விட்டுடுச்சி, நடுத்தெருவில நிக்கிற, உன் தொழில் எல்லாம் போச்சி, எல்லாம் இழந்து இப்ப நீ சூன்யமா இருக்க, இன்னும் ஏன் பிடிவாதமா இருக்க ஒரு முறை என்னை ஏத்துக்க நான் ஒரே பொண்ணு மில்லியன் கணக்குல பணம் இருக்கு எனக்கு அது மொத்தமே உனக்குதான்” என அவனது கையை பிடிக்க அவளை உதறிவிட்டவன்

   

”என் கீர்த்தானா முன்னாடி உன் பணம் கால்தூசு, உன்னை நான் என்னிக்குமே விரும்பலை. நீ அவளை விரட்டினா என்ன அவளை எப்படியாவது நான் தேடிப்பிடிப்பேன், அவள்கூடதான் நான் வாழ்வேன்” என சொல்லிவிட்டு சுந்தரத்தை பார்த்தான்

   

”உன்னை” என கத்த வர தடுத்தார் தாமரை

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.