வைத்தியநாதன் தாத்தாவோ அனைத்தும் கண்டு சிரித்தபடியே அங்கிருந்துக் கொண்டே
”தேவா” என கத்த அனைவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தனர்.
”என்ன தாத்தா”
“என்னடா இன்னும் வேடிக்கைப் பார்க்கற, அந்த டாக்டருக்கு சரியான பாடம் புகட்டனும் தூக்குடா தாமரையை” என சொல்ல தாமரை பாட்டியோ உடனே தேவாவின் கையை பிடிக்க அவனோ இருபக்கமும் மாறி மாறி பார்த்துவிட்டு சுந்தரத்தை பார்க்க அவர் மிரட்சியுடன் நிற்கவே ஒரு நொடி பொறி கலங்கி பின் தெளிவானாவன், தன் கையை உதறி இப்போது தாமரைகையை பிடித்து இழுத்துக் கொண்டு காரில் ஏற்றினான். அதை தடுக்க வந்த சுந்தரம் மற்றும் அவர்களது மகன்கள், பேரன்களை வைத்தியநாதன் தன் வேலைக்காரங்களோட மோதி பார்த்துக் கொண்டார்.
பல நாள் பகைமை வைத்தியநாதனும் சுந்தரமும் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவா மறுப்பக்கம் பார்த்தான். வேலையாட்கள் சுந்தரத்தின் மகன்கள் பேரன்களோடு சண்டையிட அந்த வீட்டு பெண்கள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். தாமரையோ
”தேவா என்ன வேடிக்கை வா போலாம்”
“அப்ப உனக்கு பரவாயில்லையா தாமரை”
“நமக்கு கீர்த்தனாதான் முக்கியம் வா” என கத்த தாஸும் வா என சைகை செய்துவிட்டு காரில் ஏறி அமர்ந்துக் கொள்ளவும் தன் தாத்தாவைப் பார்த்தான் தேவா
”நான் போறேன் தாத்தா”
“தாமரை பத்திரம், வரும் போது கீர்த்தனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாடா” என அவர் சண்டையிலும் இப்படி பேசவே அதிர்ந்த சுந்தரமோ வைத்தியை விட்டு தேவாவை பிடிக்க
Next episode pls