“நான் சரி பண்ணிடுவேன் நாங்க கிளம்பறோம்” என சொல்லி தாஸ் தேவா கீர்த்தனா மூவருமாக வீட்டை விட்டு வெளியே தேவாவின் காரில் ஏறிச்சென்றதும் சுந்தரம் தாமரையிடம்
”தேவா சாதிப்பான்னு நீ நம்பறியா”
“நான் நம்பறேன்”
”கீர்த்தனாவுக்காக செய்வாங்கறியா”
“தன் காதலுக்காக கண்டிப்பா செய்வான்”
“அப்படியே என்னைப் போல உனக்காக நான் கஷ்டப்பட்டு படிச்சி உன் கை பிடிச்சேனே அப்படித்தானே” என அவர் கேட்டு என்ன பதில் வரும் என ஆவலாக கேட்க அவரோ கேவலமாக சிரித்துவிட்டு
”என் கையை பிடிக்க ஒரு அழகான காதலை கொன்னு புதைச்சிட்ட, இரண்டு பேரோட மனசை கொன்னு அதுல நீங்க வாழறதுல பெருமை வேறயா” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட சுந்தரத்துக்கு கஷ்டமாகிப் போனது. அவருக்கு சட்டென விக்ரம் நினைவு வரவே உடனே தன் வேலையாள் கொண்டு விக்ரமை தன் ஆஸ்பிட்டலுக்கு வரவழைத்தார். அவனுக்காகவே சீக்கிரமாக ஆஸ்பிட்டல் சென்றவர் அங்கு விக்ரம் இருப்பதைக் கண்டு அவனை தன் அறைக்கு அழைத்தார்
”சார் கூப்பிட்டீங்களாமே”
“என்ன செய்யலாம்னு இருக்க”
“சார் புரியலை”
“இல்லைப்பா உன் காதலுக்காக நீ என்ன செய்யலாம்னு இருக்க”
Next episode pls