வேண்டிய திசையை குறிப்பிட்டு அனுப்பினாள். கடைசியாக சக்தியும் சத்யாவும் ஒன்றாக கிளம்பினார்கள்.
“ஒன்னா போகலாம். டென்ஸ் (dense) ஏரியா வந்தப் பிறகு தனியா பிரிஞ்சு தேடலாம்,” என்றாள் சக்தி.
“ரைட் சக்தி. ஆனால் எனக்கு ஒரு விஷயம் புரியலை! எப்படி இந்த இடத்தை போலீஸ் சீல் வைக்காம இருக்காங்க?” என்றாள் சத்யா கேள்வியுடன்!
“இது க்ரைம் சீன் கிடையாதே சத்யா! எதுக்கு சீல் வைக்கப் போறாங்க?”
“அப்போ நாம ஏன் அந்த திருவிழா பக்கத்துல இருக்க காட்டுல தேடாம இங்கே தேடுறோம்?”
“இங்கே தேடப் போறோம்னு தானே நம்ம சந்தேக லிஸ்ட்ல இருக்குறவங்க எல்லோர் கிட்டேயும் சொன்னோம், அதான் தேடுறோம்!”
“தேடிப் பார்த்து எதுவும் கிடைக்கலைனா என்ன செய்றது???”
“அப்படி எதுவும் கிடைக்கலைனா, நாம கிரிமினல்ஸை சரியா ட்ரிகர் செய்யலைன்னு அர்த்தம்!”
“அப்போ இந்த பெரிய பங்களால இருக்கவங்கள்ள யாரோ ஒருத்தங்க தான் கல்ப்ரிட்ன்னு நீ கட்டாயம் நம்புறீயா?”
“ஆமாம். சாட்சி தான் இல்லை!”
“ஹேய்! சாட்சி மட்டும் தான் இல்லையா??? அப்போ எதையோ கண்டுப்பிடிச்சிட்டீயா? அதான் இன்னைக்கு சீரியஸா இருந்தீயா? என்ன கண்டுப்பிடிச்ச??”
“இப்போ வேண்டாம் சத்யா. சாட்சி கிடைச்சப்புறம் சொல்றேன். இந்த விபரம் தெரிஞ்சுக்குறது உனக்கு ஆபத்தா கூட போய் முடியலாம்.”