சக்தி சொன்ன ட்ரோனின் டிஸ்க்ரிப்ஷன் சத்யாவிற்கு நினைவில் இருந்தது. இது தானா அது? அப்படி என்றால் சக்தியின் சந்தேகம் சரி தானா??
சத்யாவை தொடர்ந்து யோசிக்க விடாமல் கிர்ர்ங் கிர்ர்ங் கிர்ர்ங் என்று மீண்டும் சத்தம் போட்டு இலைகளை சிலுப்பிக் கொண்டு மெல்ல பறந்து சத்யாவை நோக்கி வந்தது அது. சத்யா யோசனையை விட்டு விட்டு திரும்பி வேகமாக நடந்தாள். கிர்ர்ங் எனும் சத்தம் பக்கத்தில் கேட்கவும் ஓடத் தொடங்கினாள். அவ்வப்போது திரும்பிப் பார்த்தாள். அது பொறுமையாக சத்யாவை நோக்கி மெல்ல வந்துக் கொண்டிருந்தது.
“சக்தி, சக்தி!” முடிந்த அளவு சத்தமாக குரல் கொடுத்துக் கொண்டு ஓடினாள்.
டென்ஷனில் சக்தி கொடுத்த வாக்கி டாக்கி, விசில் எதுவும் அவளுக்கு நினைவில் வரவில்லை. அடர்த்தியான காட்டில் எங்கே இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த கொஞ்ச நஞ்ச எனர்ஜியை பயன்படுத்தி “சக்தி,” என்று சத்தமாக அழைத்தாள் சத்யா. அதற்கு முன்பே சக்தி அங்கே வந்திருந்தாள். சத்யா சோர்ந்திருந்த கையை நீட்டி ட்ரோன் இருந்த பக்கத்தை காட்டினாள்.
சக்தி கையோடு கொண்டு வந்திருந்த ரிமோட் ஜாமரை எடுக்க முயற்சி செய்தாள். அதை அவள் எடுக்கும் முன்பே அந்த ட்ரோன் திடீரென உயிரற்று விழுவதுப் போல கீழே விழுந்தது.