“சக்தி, இது அநியாயம். நான் எதையாவது உன் கிட்ட சொல்லாம இருந்திருக்கேனா?”
“அப்படி சொல்லாம இருக்க முதல்ல எதையாவது கண்டுப்பிடிக்கனும்!”
“போ, நீ அந்த சைட் போ, நான் இங்கே தனியா போறேன். நானே கண்டுப்பிடிக்கிறேன்!”
“சத்யா, நான் விளையாட்டுக்கு சொன்னேன்!”
“எப்படியும் தனியா போறதா தான் ப்ளான் வச்சிருந்தோம். நீ அப்படி போ. நான் இங்கே போறேன்.”
“சத்யா?”
“போ சக்தி!” சத்யா சக்தியின் எதிர் திசையில் நடந்தாள்.
எந்த இலக்குமில்லாமல் நடந்தாள். சக்தி ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சத்யாவிற்கு மெசேஜ் அனுப்பி விசாரித்தாள். சத்யாவிற்கு சக்தியின் இந்த ‘ஓவர் ப்ரோடக்டிவ்’ பக்கம் ஆச்சர்யமாக இருந்தது. தென்றல்வாணனும் கூட அப்படி தான். ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்யா சுவாரசியத்துடன் சத்தம் வந்த இடத்தை உற்றுப் பார்த்தாள். ஒரு துப்பாக்கி முனை அவளை குறிப் பார்த்துக் கொண்டிருந்தது. அடர்த்தியான மரங்களால் சூழப் பட்டிருந்ததால் அங்கே வெளிச்சம் அதிகம் இல்லை.
என்ன செய்கிறாள் என்றே புரியாமல் பயத்தில் இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள் சத்யா. அந்த துப்பாக்கி பதிந்து இருந்த சிறிய கருப்பு உருவமும் (!) அவளைத் தொடர்ந்து முன்னே வந்தது.