(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“முடியாதுப்பா மீட்டிங் டீலிங்ன்னா கூப்பிடுங்க வரேன் சித்தப்பா இருக்காரு அர்ஜூன் இருக்கான் அவங்களை வைச்சி இந்த 1 மாசம் ஓட்டுங்க” என அவன் சொல்லும் போதே வந்தனா வந்தாள்

   

அவளைப்பார்த்த அந்த 3 பேரும் வியந்தார்கள். வந்தவள் நேராக ரிஷியிடம்

   

”உங்களுக்கு எந்த டிஷ் பிடிக்கும்”

   

“எதுக்கு”

   

“சமைக்கதான்”

   

“ஏன் உனக்கு பிடிச்சத சமைச்சி போடு”

   

“இல்லை உங்க விருப்பம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு அதை சமைக்க நினைச்சேன்”

   

”இந்த வேலையே வேணாம் எனக்கு பிடிச்சதை நீ செஞ்சி என்னை இம்ப்ரஸ் பண்ண நினைக்கிற அது வேஸ்ட். எனக்கு பிடிச்சத நான் சொல்லிட்டா அப்புறம் இன்ட்ரஸ்ட் இருக்காது சரியா போ மொத்தமா எல்லாருக்கும் சேர்த்து சமைச்சிடு எனக்கு எல்லாமே பிடிக்கும் போம்மா” என சொல்ல அவள் ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு சென்றாள். அவள் சென்றதும் மோகனசுந்தரமும் ரிஷியை பார்த்து முறைத்துவிட்டு தன் தம்பி கேசவமூர்த்தியுடன் ஆபிசுக்கு சென்றார்.

   

வந்தனா இம்முறை அவசரமாக குளித்துவிட்டு கிச்சனுக்குள் 11 மணிக்கே நுழைந்துவிட்டாள்.

   

என்னென்ன சமையல் செய்ய வேண்டும் என ஒரு முறை நினைத்துக்கொண்டாள். அந்நேரம் மற்ற பெண்கள் வராமல் போகவே அவசரமாக 4 அடுப்பையும் தனக்கு சொந்தமாக்கி சமைக்க ஆரம்பித்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.