(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இல்லை தாத்தா இப்படி நிறைவா சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியிருக்கும்னு என் வீட்ல சொல்வாங்க அதான்” என்றாள் வந்தனா

   

“அதுவும் சரிதான் ஆனா எதுக்காக இவ்ளோ செய்யனும் நான் காலையிலயே சொன்னேன் கொஞ்சமா செய்ய சொல்லி ஆனா கேட்க மாட்டேங்கற சரி பரவாயில்லை இனிமேல இவ்ளோ செய்ய வேணாம் மத்தவங்களதும் நாங்க எல்லாரும் சாப்பிடனும்ல அதனால சும்மா ஒரு 2 டிஷ் செய்தாலே போதுமே”

   

“சரிங்க தாத்தா” என சொல்லிவிட்டு மற்றவர்களுக்கும் பரிமாறிவிட்டு சென்று அமர்ந்தாள். 

   

சமையல் நன்றாக இருந்தது என அனைவரும் பாராட்ட அவளுக்கு தலைகால் புரியவில்லை. அடுத்து மிருதுளா வந்தாள் அவள் இன்று சிக்கன் டிக்கா மசாலாவும் சாதமும் கொண்டு வந்திருந்தாள். சாதம் குறைவாகவும் கிரேவி அதிகமாக என பரிமாற அதற்கு தாத்தா

   

”இரும்மா ஏன் இவ்ளோ கிரேவி இதுக்கு சரியான சாதம் எங்க இருக்கு”

   

“இருங்க தாத்தா வந்தனா நிறைய செஞ்சிருக்கா அதை நான் கொண்டு வரேன்”

   

“இல்லை இது உன்னோட சமையல் இப்படி அளவு மாறி மாறி சமைக்கறது தப்பு அதோடு அடுத்தவங்க சமையலை பார்க்காதேன்னு நான் காலையிலயே சொல்லிட்டேனே மறந்துட்டியாம்மா”

   

“சாரி தாத்தா”

   

“சரி போதும் இவ்ளோ கிரேவி வேணாம் போதும்” என சொல்லிவிட அவளும் மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு சென்றமர்ந்தாள். 

   

அந்த சமையலும் ஒரு தினுசாக நன்றாக இருக்கவே சாப்பிட்டனர்.

   

அடுத்து ரிஷி நந்தினியின் சமையலை சாப்பிட ஆவல் கொண்டான். அவளும் அனைவருக்கும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.