(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

ஏதோ கல்யாண விருந்து போல ஏகப்பட்ட ஐட்டங்கள் செய்யவும் நந்தினி யோசித்து சாதம் சாம்பார் ரசம் தயிர்சாதம் தாளித்து சமையலை செய்து விடலாம். என நினைத்து அவசரமாக தான் நினைத்ததை செய்ய ஆரம்பித்தாள்.

   

அந்நேரம் வந்த சோனாவும் வந்தனாவின் சமையலை பார்த்து அதிர்ந்துவிட்டு இம்முறை லேட்டானாலும் சரி சூடாக பரிமாற வேண்டும் என நினைத்து ஏதோ ஒரு மேற்கத்திய உணவை செய்ய ஆரம்பித்தாள். அதே சமயத்தில் மிருதுளாவும் கிச்சனுக்குள் வந்து தான் செய்ய நினைத்த அசைவ சமையலை செய்து முடித்தாள். 

   

மணி ஒன்றானது.

   

4 பெண்களும் தாங்கள் செய்த சமையலை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு காத்திருக்க வீட்டில் இருந்தவர்களும் சரி வெளியே சென்றிருந்தவர்களும் சரி சாப்பிட டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்தார்கள்.

   

முதலில் தாத்தா சோனாவை அழைக்க அவள் சற்று பெரிய கிண்ணத்தில் ஒரு டிஷ் செய்திருந்தாள். அதை பரிமாறும் முன்பே பார்த்துவிட்டு 

   

”என்னம்மா அது”

   

”தாத்தா இது க்ரீன் பீன்ஸ் அன்டு மஸ்ரூம் டர்க்கிரைஸ் டிஷ் தாத்தா” என அவள் சொல்லவும் அவருக்கு அதை பார்க்கவே சாப்பிட தோணாமல் போனாலும் வேறு வழியில்லாமல் தன் பிளேட்டை காட்ட அவளும் தாத்தாவுக்கும் அடுத்து அனைவருக்கும் பரிமாறினாள்.

   

மற்றவர்களுக்கு எப்படியோ தாத்தாவுக்கும் ரிஷிக்கும் அதைப்பார்க்கவே பிடிக்காமல் போக அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துவிட்டு ரிஷியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கருணா மற்றும் தினகரன் ஆசையாக அதை சாப்பிடுவதைக்கண்ட ரிஷி அவர்களிடம் தனக்கு பரிமாறினதை தர

   

”என்ன அண்ணா சாப்பிடலையா நல்லாதானே இருக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.