(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பரிமாறினாள் சாதம் சிறிது பரிமாறி அதற்கு ஏற்ப குழம்பு ஊற்றினாள். அதை அனைவரும் சாப்பிட்ட பின் மறுபடியும் சிறிது சாதம் பரிமாறி ரசம் ஊற்றினாள். அந்த ரசம் சாதம் சாப்பிட்ட காரணத்தால் அனைவருக்கும் இதற்கு முன் சாப்பிட்ட உணவுகளால் ஏற்பட்ட ஒரு வித வயிறு சங்கடத்தை ரசம் சரி செய்தது. அதற்கு அடுத்து அவள் தாத்தாவிடம்

   

”தாத்தா தாளிச்சி போட்ட தயிர் சாதம் கொஞ்சம் செஞ்சிருக்கேன் உங்களுக்கு வேணும்னா பரிமாறிடறேன்” என கேட்டாள்

   

“சரிம்மா பரிமாறு” என சொல்ல அவளும் அனைவருக்கும் ஒரு கரண்டி தயிர் சாதம் பரிமாறினாள். அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு விட்டு நன்றாயிருக்கிறது என பதிலும் சொல்லிவிட்டு எழுந்தார்கள். 

   

சமையல் செய்த களைப்பிலும் உண்ட களைப்பிலும் 3 பெண்களும் தங்கள் அறைக்கு சென்று உறங்கிவிட வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு சென்றார்கள். தாத்தா, பாட்டியும் வீட்டில் இருந்த மற்றவர்களும் தங்கள் அறையில் ஓய்வெடுக்க சென்றார்கள். நந்தினி மட்டும் அமைதியாக சோபாவில் அமர்ந்து காலை பேப்பரை படித்துக் கொண்டிருந்தாள் அதைக்கவனித்த ரிஷி ஆசையாக அவளிடம் வந்தான்

   

”நந்தினி” என அழைக்க

   

”அத்தான்” என அவளும் சந்தோஷமாக பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவனை பார்த்து சிரித்தாள்.

   

”என்ன செய்ற நந்தினி”

   

”சும்மாதான் பொழுது போகலை அதான் பேப்பர் படிக்கிறேன் அத்தான்”

   

“ஓ அப்படியா சரி வா நான் உனக்கு என் வீட்டை சுத்திக்காட்டறேன்” என அவளை அழைக்க அவளும் அவனுடன் எழுந்துக்கொண்டாள். வீடு முழுக்க சுற்றிக்காட்டிவிட்டு வீட்டிற்கு முன்புறம் இருந்த தோட்டத்திற்கு வந்தார்கள். அந்த தோட்டத்தில் போடப்பட்ட சேர்களில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.