(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அமர்ந்துக்கொண்டார்கள்.

   

முதலில் சோனாவே ஆரம்பித்தாள் இம்முறை அவள் சைனீஸ் டிஷ்ஷான டிராகன் பிரான் நூடுல்ஸ் செய்திருந்தாள். அதை அனைவருக்கும் பரிமாறவும் தாத்தாவும் சாப்பிட்டார் சரியான மசாலா அளவில் சரியாக அனைவருக்கும் வரும்படி சமைத்திருந்தாள் சாப்பிட்டவருக்கு பிடித்திருக்க தாத்தா சோனாவைப் பார்த்து

   

”அம்மாடி சூப்பராயிருக்கும்மா இந்த நூடுல்ஸ் நல்லாயிருக்கு” என சொல்ல சோனாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது காலையில் இருந்து சொதப்பியதற்கு பலன் இப்போது கிடைத்தது. நன்றாக உள்ளது என தாத்தாவே சொல்லவும் அவள் வானில் பறந்தாள்.

   

மற்றவர்களும் ஏன் ரிஷியும் அந்த உணவு நன்றாயிருக்கிறது என பாராட்டி முடித்தார்கள்.

   

அடுத்து வந்தனா காலையில் தாத்தா தனக்கு வயசாகிவிட்டது என சொன்ன காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு சப்பாத்தி செய்திருந்தாள். அனைவருக்கும் அதை பரிமாறினாள் சப்பாத்திக்கு கொண்டைக்கடலை தால் செய்திருந்தாள். அதுவும் பிடித்திருந்தது இருந்தாலும் தாத்தா

   

”என்னம்மா இது காலையிலயும் சப்பாத்தி இப்பவும் சப்பாத்தியா“

   

“அது தாத்தா நீங்கதானே காலையில சொன்னீங்க மசாலா அதிகம் வேணாம் வயசாயிடுச்சி அப்படின்னு சொன்னதால நான் சப்பாத்தி செஞ்சேன்”

   

“அதுவும் சரிதான் ஆனா இங்க வயசானவங்கன்னு பார்த்தா நான் அருந்ததி மட்டும்தான் இருக்கோம் சரி என் பையன்களுக்கும் பிபி கொலஸ்ட்ரால் சுகர் இருக்கறதால இந்த சப்பாத்தி ஓகே ஆனா என் 3 பேரன்களுக்கும் சப்பாத்தின்னாலே பிடிக்காது.”

   

“அய்யோ இதைப்பத்தி எனக்கு தெரியாதே” என வந்தனா அலற 

   

”பரவாயில்லைம்மா இனி தெரிஞ்சிக்க இனிமேல சப்பாத்தியை எங்களுக்கு பரிமாறு என் பேரன்களுக்கு வேற ஏதாவது சமையல் செஞ்சி பரிமாறு” என சொல்லிவிட்டு சாப்பிட்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.