(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

முடித்தார்.

   

அடுத்து தாத்தா மிருதுளாவை அழைக்க அவளும் தான் செய்த எக் பிரைட் ரைஸ் பரிமாறவும் தாத்தாவும் அதையும் சாப்பிட்டு விட்டு நன்றாக இருந்தது என பாராட்டினார். மற்றவர்களும் அவளை பாராட்டினார்கள். இம்முறை மிருதுளா அனைவருக்கும் பத்தும்படி செய்திருந்ததால் தாத்தா எந்த குறையும் சொல்லாமல் இருக்கவே பாட்டி மிகவும் மகிழ்ந்து அவளை அதிகமாகவே புகழ்ந்தார். பாட்டியின் அலப்பறையை தாங்க முடியாத ரிஷி தாத்தாவை பார்த்து முறைக்க அதை புரிந்துக்கொண்டு உடனே தாத்தா நந்தினியை அழைத்தார்.

   

காலையிலேயே இட்லி தோசை பூரி என வந்தனா செய்துவிட்டதால் நந்தினி இடியாப்பமும் உருளைக்கிழங்கு குருமாவும் செய்திருந்தாள். அதை அனைவருக்கும் பரிமாற அவர்களும் அதை விரும்பி சாப்பிட்டு விட்டு ரிஷியின் சித்தி சித்தப்பா அவளை அதிகமாக பாராட்டிவிட்டே எழுந்தார்கள்.

   

 பாட்டிக்கு நந்தினியை பிடிக்கவில்லையென்றாலும் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டே நந்தினி வைத்த இடியாப்பத்தை ஆசையாக சாப்பிட்டு கோபமாக எழுந்து சென்றார். ரிஷி கண்களாலேயே நந்தினி செய்த சமையலுக்கு பாராட்டு தெரிவித்தான். கருணாவும் தினாவும் நந்தினியை பார்த்து பாசமாக பாராட்டி சாப்பிட்டு முடித்தார்கள்.  மற்றவர்கள் நந்தினியிடம் நடந்துக்கொள்வதை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டிருந்த தாத்தாவும் தன் மனதுக்குள் நந்தினிக்கு மார்க் போட்டுக்கொண்டிருந்தார்.

   

அனைவரும் சாப்பிட்ட பின் நந்தினியும் சாப்பிட்டு முடித்துவிட்டு கடைசியாக எழுந்தவள் நேராக தாத்தாவிடம் வந்தாள். அதற்குள் மிச்ச 3 பெண்களும் தங்கள் அறைகளுக்கு சென்றிருந்தனர்.

   

”தாத்தா” என்றாள் நந்தினி

   

“சொல்லும்மா”

   

“பிரிட்ஜ்ல பால் இருக்கு அது எப்படி நாளைக்கு காலையில பயன்படுத்துவீங்களா இல்லை இப்பவே பால் காய்ச்சி கொண்டு வரட்டுமா தாத்தா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.