சைகையை உடனே புரிந்துக்கொண்டவன் அவள் முன்னால் செல்ல 2 நிமிடம் கழித்து பின்னாடி சென்றான். ஒரு மறைவான இடத்தில் நின்றிருந்த நந்தினியிடம் சென்ற ரிஷி ஆசையாக அவளை அணைத்துக்கொண்டு அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
”அத்தான்” என்றாள் அன்பாக
”ம்” என்றான் ரிஷி
“இன்னிக்கு முதல் நாள் எப்படியோ முடிஞ்சிடுச்சி நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா அத்தான் தாத்தா என்ன சொல்வாரு மத்தவங்க என்ன சொல்வாங்க நான் செய்றது பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்னாகும் அப்படி இப்படின்னு நினைச்சி டென்ஷன் ஆயிட்டேன் அத்தான்” என சோர்ந்து போய் சொன்னவளை இன்னும் நெருக்கமாக தன்னுடன் அணைத்துக்கொண்டு
”டென்ஷன் எதுக்கு நந்தினி மத்தவங்களை விட நீ நல்லாதான் செஞ்சிருக்க யாரும் உன்னை தப்பு சொல்லலையே அப்புறம் என்ன”
“வந்தனா நல்லாவே சமைக்கறா ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய டிஷ் செய்றாளே”
என வருத்தப்படவும்
”அவளைப்பத்தி நீ கவலைப்படாத நீ உன் கடமையை செய் பலன் தானா கிடைக்கும்”
“எப்படி கிடைக்கும் அதுக்கு 1 மாசம் இருக்கே”
“நான் சொன்ன பலன் வேற”
”என்னது அத்தான்” என கேட்க நந்தினியை இன்னும் தன்னுடன் நெருக்கி அணைத்த ரிஷி அவளது 2 கன்னத்திலும் மாறி மாறி முத்தம் தந்தவன் சற்று வீட்டையும் சுற்றி சுற்றிப்பார்த்து யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவளது உதட்டிற்கும் முத்தம் தந்து அவளை