(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”காலையில பிரஷ்ஷான பால் வரும் நந்தினி இப்ப எல்லாருக்கும் பால் கொண்டுவா குடிக்கறவங்க குடிக்கட்டும்” என தாத்தா வில்லங்கமாக ரிஷியை பார்த்து சொன்னார். அதற்கு ரிஷி தாத்தாவை பார்த்து முறைக்க அதை கவனிக்காத நந்தினியும் ரிஷி பால் குடிக்கமாட்டான் என தெரியாமல் ஆசையாக கிச்சனுக்குள் சென்றாள்.

   

அனைவருக்கும் பாலில் பாதம் பவுடர் போட்டு கலந்தவள் ரிஷிக்கான பெரிய கண்ணாடி டம்ளரில் மட்டும் முதலில் பாதி உடைக்கப்பட்ட அனைத்து விதமான நட்ஸ்களை சிறிது கொட்டி அதன் மேல் பாதாம் பவுடர் தூவிவிட்டு அதற்கு மேல் சர்க்கரை கலந்த சூடான பாலை ஊற்றி அதற்கு மேலும் பாலில் செய்யப்பட்ட கிரீம் சிறிது வைத்து அதன் மேலும் சிறிது சாக்லேட் தூள் சிறிது தூவியவள் அதற்கு மேலும் நட்ஸ்களை போட்டு அழகாக அலங்காரம் செய்து வெள்ளி ஸ்பூன் வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். 

   

முதலில் அவசரமாக அந்த நட்ஸ் பாலை ரிஷிக்கு தந்தவள் மற்றவர்களுக்கு வெறும் பாதாம் பாலை தந்தாள். ரிஷி தனக்காக கொடுத்த பால் டம்ளரை மேலும் கீழுமாக பார்த்தான் எப்படியும் கால் லிட்டர் பால் இருக்கும் பெரிய சைஸ் க்ளாஸ் அதிலும் அடியிலும் மேல் புறமும் நட்ஸ் இருக்க நடுவில் பாலும் அதற்கு மேல் சாக்லேட் தூள்கள் கூட தூவியிருந்தாள். அதை குடிக்காமல் நந்தினியின் அன்பை நினைத்து ரசித்து நட்ஸ் டம்ளரை பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி.

   

ரிஷியின் பால் டம்ளரை பார்த்த தினகரனுக்கு பொறாமை வர அவன் கத்தினான்

   

”எனக்கும் ரிஷிஅண்ணாவுக்கு தந்த பால் மாதிரிதான் வேணும்” என்றான். அதை எதிர்பாராத நந்தினி சற்று தடுமாற சித்தி சுசித்ரா வந்தாள்

   

”எதுக்கு உனக்கு இந்த பால் போதும் சாப்பிடு”

   

“முடியாது ரிஷிஅண்ணாவோட பால் டம்ளரை பாருங்க ஏகப்பட்ட நட்ஸ் சாக்லேட் க்ரீம் எல்லாம் கலந்திருக்கு அண்ணாக்குதான் பால் குடிக்கபிடிக்காதே அப்புறம் என்ன எனக்கு அதான் வேணும் வாங்கிக்கொடுங்கம்மா” என கத்த கருணாவும் அந்த டம்ளரை உற்றுப் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.