சமைச்சி சாப்பிட்டுக்குங்க. நீங்க நல்லா அன்பா பழகுனீங்கன்னா உங்க பொண்டாட்டியும் உங்களுக்கு ஸ்பெஷலா எதையாவது செய்து வைப்பா போதுமா”
“நிஜமாவா அம்மா”
என தினகரன் ஆசையாக கேட்க
”ஆமாம்டா இப்ப பால் குடிச்சிட்டு போய் தூங்குங்க போங்க” என சொல்ல அவர்களும் பால் குடித்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றனர்.
சித்தியிடம் வந்த நந்தினி
”சாரி அத்தை நான் எதையோ செய்ய போய் இப்படி பிரச்சனையாயிடுச்சி”
“அவங்க சின்ன பசங்க இப்படித்தான் ரிஷியோட எல்லா விசயத்திலயும் போட்டி போட்டுக்கிட்டே இருப்பாங்க நீ அவங்களுக்காக உன்னை மாத்திக்க வேணாம். உனக்கு பிடிச்சதை நீ செய் போதும் மாமா உன்னை எதுவும் சொல்லலைல்ல அப்புறம் என்ன கவலையை விடு. இப்ப டைம் பார்த்தியா மணி 10. இதோட இந்த நாளுக்கான போட்டி நேரம் முடிஞ்சிடுச்சி. இனிமே நீ நிம்மதியா தூங்க போகலாம் திரும்பவும் அடுத்த நாள் போட்டியில நீ கலந்துக்கனும் யார் கண்டா நாளைக்கு மாமா என்ன மாதிரியான போட்டி வைச்சிருக்கார்னு தெரியலை எதுக்கும் பயப்படாம தைரியமா கலந்துக்கனும் சரியா”
“அத்தை உங்களையும் இப்படித்தான் போட்டி வைச்சி தேர்ந்தெடுத்தாரா”
“இல்லைம்மா ஜாதக பொருத்தம் பார்த்து என்னை தேர்ந்தெடுத்தாங்க. ரிஷின்னா மாமாக்கு உசுரு. அவனுக்காகதான் இதெல்லாம் செய்றாரு. இதே கருணா தினாவுக்கெல்லாம் இப்படி சுயம்வரம் நடத்த மாட்டாரு சரி நான் போய் தூங்கறேன் நீயும் போய் தூங்கும்மா காலையில சீக்கிரம் எழுந்துக்கனும்” என சொல்லவும் நந்தினியும் சரியென தலையாட்ட சுசித்ரா தன் அறைக்கு உறங்க சென்றுவிட்டார்.
அனைவரும் சென்றபின் நந்தினி ஆசையாக ரிஷியை பார்த்து சைகை செய்தாள். அந்த