பார்த்து கோபமாக தன் தாயிடம்
”இது என்ன அநியாயம் அண்ணாவுக்கு மட்டும் நட்ஸ் பால் எங்களுக்கு வெறும் பாதாம் பாலா” என குறையாக சொல்ல நந்தினிக்கு கஷ்டமாகி போனது.
எங்கே தன் தம்பிகள் தன்னுடைய நட்ஸ் பால் டம்ளரை பிடுங்கி குடித்துவிடுவார்களோ என பயந்த ரிஷி அவசரமாக ஸ்பூன் மூலம் பாலை கலக்கி குடித்து காலி செய்தான். அவனுக்கு திருப்தியாக இருந்தது. மிகவும் வித்தியாசமாக ருசியாகவே இருந்தது. அவனின் செயலைக்கண்ட தாத்தாவிற்கு சிரிப்பே வந்தது.
கருணாவும் தினாவும் ரிஷியை முறைக்கவே சித்தி இருவரையும் சமாதானப்படுத்தினாள்
”எதுக்குடா இப்படி முறைக்கிறீங்க”
“எங்களுக்கும் நட்ஸ் பால் வேணும்” என கத்தினான் தினகரன்
”டேய் அடிவாங்காதீங்கடா நந்தினிக்கு ரிஷியை பிடிச்சிருக்கு அந்த அன்பை வெளிக்காட்டறதுக்காக அவள் ரிஷிக்காக ஸ்பெஷலா செஞ்சிருக்கா அதை போய் நீங்க கேட்கறீங்க.” என்றாள் சுசித்ரா
“ஏன் கேட்டா என்ன தப்பு சமையல் எல்லாம் பொதுவாத்தானே செய்தாங்க இதுல மட்டும் என்ன பாரபட்சம் காட்டறாங்க” என்றான் கருணாகரன்
”டேய் கருணா நீயுமா தினகரன்தான் சின்னவன் புரிஞ்சிக்காம கத்தறான் உனக்கென்ன” என தாத்தா கேட்க அதற்கு சுசித்ராவே தன் இரு மகன்களிடமும்
”இங்க பாருங்கடா நான் கூட கல்யாணம் ஆன புதுசுல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் சமைச்சேன் ஆனா பரிமாறும் போது உன் அப்பாவுக்காக ஸ்பெஷலா ஏதாவது ஒண்ணு செய்து அவருக்கு மட்டும் வைப்பேன். என்னோட அன்பை வெளிக்காட்டறதுக்காகதான் அந்த அன்பை எல்லாருக்கும் தரமுடியாது. தரவும் கூடாது நந்தினி கரெக்டாதான் செய்திருக்கா உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது உங்களுக்கு வரப்போற பொண்ணுங்களை வைச்சி நீங்க வித விதமா