(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பெருமான ஆப்பர்களை வாங்கியிருக்கேன். நான் போனா எல்லா மீட்டிங்கும் சக்ஸஸ்தான் தெரியுமா” என அவனது சுயபுராண பெருமையை அளந்து விட்டுக்கொண்டிருக்க நந்தினி அமைதியாகவும் ஆர்வமாகவும் அவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள். மணி ஐந்தரை ஆகவும் நந்தினி எழுந்துக்கொண்டாள்

   

”அத்தான் நான் போய் எல்லாருக்கும் டீ காபி போட்டு கொண்டு வரேன்” என சொல்லவும் அவனும் அவளோட சேரந்து வீட்டுக்குள் நுழைந்தான். அதற்குள் எல்லாரும் எழுந்து வந்துவிட நந்தினி கிச்சனுக்குள் சென்று அனைவருக்கும் சேர்த்து டீ போட்டு அதை அனைவருக்கும் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தவள் டீயை குடித்துக்கொண்டே தாத்தாவிடம் பேச ஆரம்பித்தாள். 

   

வந்தனாவோ பூஜையறை சுத்தம் செய்து விளக்கேற்றி வீடு முழுக்க கேட்கும் படி ஸ்லோகம் பாடினாள். சோனாவோ அந்த சத்தத்தால் எழுந்து கீழே வந்து வந்தனா செய்வதை பார்த்துவிட்டு சோபாவில் அமரந்துக்கொண்டாள்.

   

எதிரில் இருந்த ரிஷியிடமும் தாத்தாவிடமும் தன் கம்பெனி பற்றி அளந்து விட ரிஷியும் அவனோட கம்பெனி பற்றி அளக்க ஆரம்பித்தான். தாத்தா இரு கம்பெனிகளுக்கும் இடையே 6 வித்தியாசங்களை கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த நந்தினியும் குறுக்கே பேசாமல் அனைத்து தகவல்களையும் மனதில் குறித்துக்கொண்டாள். மணி 7.30 ஆன சமயத்தில் மிருதுளாவும் ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்

   

”என்னம்மா இவ்ளோ லேட்டா வர்ற தூங்கிட்டியா”

   

“இல்லை தாத்தா நான் என் ப்ரெண்ட்ஸ்களோட சேட்டிங் பண்ணிட்டு இருந்தேன்” என சொல்ல தாத்தா மணியை பார்த்துவிட்டு அந்த 4 பெண்களையும் அழைத்து ஒன்று சேர்த்தார்

   

”நைட் டின்னர் 9.30 மணிக்கு ரெடியாயிருக்கனும். சிம்ப்ளா செய்ங்க அதிகமா செய்ய வேணாம் நைட் நாங்க யாரும் அதிகமா சாப்பிட மாட்டோம் அதனால நிதானமா கொஞ்சமா செய்ங்க போங்க” என சொல்ல அந்த 4 பெண்களும் கிச்சனுக்குள் சென்றனர். 

   

சரியாக 9.30 மணிக்கு வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட டைனிங் டேபிளில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.