(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“இல்லை என்னோட பிளேட்ல அதிகமா இருக்கு அதான்”

   

“ஓ சரி கொஞ்சமா போடுங்க” என சொல்ல அதான் சாக்கு என ஒரு ஸ்பூன் அளவு வைத்துக்கொண்டு மீதி மொத்ததையும் அவன் பிளேட்டில் வைத்துவிட்டு அந்த ஸ்பூன் டிஷ்ஷை சாப்பிட்டு முடித்தான் ரிஷி. 

   

தாத்தா, பாட்டி, ரிஷியை தவிர மற்றவர்கள் அதை சாப்பிட்டனர். நன்றாகவும் இருந்தது வித்தியாசமாகவும் இருந்தது. என்ன இருந்தாலும் அந்த ருசி அவர்களுக்கு சற்று வெறுப்பை அளித்தது. வேறு வழியில்லாமல் மோகனசுந்தரம் அந்த டிஷ்ஷை சாப்பிட்டு விட்டு சோனாவை அதிகமாகவே புகழ்ந்தார்.

   

அடுத்து பாதிக்கு மேல் சாப்பிட முடியாமல் போன தாத்தா அந்த பிளேட்டை அப்படியே தள்ளி வைத்துவிட்டு வேலைக்காரனிடம் தந்தவர் வேறு புதிய பிளேட்டை வைத்துக்கொண்டார். அதைக்கவனித்த சோனா

   

”என்னாச்சி தாத்தா நல்லாயில்லையா”

   

“நல்லாயிருக்கும்மா ஆனா இந்த மாதிரி நான் சாப்பிட்டதில்லையா அதான் புதுசா இருக்கு”

   

“ஓ இதுவும் என்னோட பேவரிட்தான்.”

   

“சரி சரி நீ சாப்பிடும்மா” என அவளை சாப்பிட விட்டு அடுத்து வந்தனாவை அழைத்தார். அவளோ திருமண விருந்து போல உணவுகளை அடுக்கிவிட்டாள்.

   

சாதம், காரக்குழம்பு, வத்தகுழம்பு, 2வகை கூட்டு, 2 வகை பொறியல், அப்பளம், ஊறுகாய் என ஒரு கல்யாணத்திற்கு சென்று வந்த நினைவு வர தாத்தா அவளிடம்

   

”அம்மாடி எதுக்காக இப்படி சமைச்சி வைச்ச இங்க யாருக்கு கல்யாணம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.