(Reading time: 21 - 42 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சோனா தான் செய்யும் உணவு முறை மேற்கத்திய பாணியில் இருப்பதால் சமையல் செய்ய 12 மணிக்கு வரலாம் அதற்குள் தன் கம்பெனியின் வேலைகளை முடிக்க எண்ணி தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

   

மிருதுளாவும் ப்ரிட்ஜில் இருந்த சிக்கனை பார்த்தபடியால் இதை வைத்து ஏதாவது கிரேவி செய்துவிடலாம். இதற்காக இப்போதே ஏன் செல்ல வேண்டும் பொறுமையாக செல்லலாம் என நினைத்து அவளும் தன் அறையில் வந்து படுத்து தூங்கிவிட்டாள்.

   

நந்தினி கிச்சனுக்குள் செல்ல அங்கு வந்தனாவின் ரகளையைக் கண்டு பொறுக்க முடியாமல் அங்கிருந்து ஹாலுக்கு திரும்பி வந்தவள் தாத்தாவின் முன் நின்றாள்

   

”என்னம்மா” என கேட்க

   

”அது தாத்தா வந்தனா 4 அடுப்பையும் பிடிச்சி சமைச்சிக்கிட்டு இருக்கா அதனால நான் 12 மணிக்கா கிச்சனுக்கு போறேன் அதுக்குள்ள அவளும் சமைச்சிடுவா அதுவரைக்கும் உங்க கூட பேசறேன்” என சொல்ல

   

உடனே ரிஷியும் 

   

”நானும் பேசறேன் வா என் கூட இந்த வீட்ல பேசறதுக்கு ஆளே இல்லை யாரை கூப்பிட்டாலும் வரமாட்டாங்க நீயா வந்து மாட்டினியா உட்காரு” என சொல்ல தாத்தாவும்

   

”ஆமாம்மா உட்காரு ஒரு மணி நேரம் பேசு அப்புறம் போய் சமையல் பண்ணு” என சொல்லவும் நந்தினியும் அமர்ந்தாள். ஒரு மணி நேரம் நந்தினியிடம் தாத்தாவும் ரிஷியும் நன்றாகவே பேசினார்கள். 

   

சரியாக 12 மணி ஆனதும் சுவரில் மாட்டியிருந்த கடிகார பெண்டூலம் சத்தம் எழுப்ப நந்தினி எழுந்து தாத்தாவிடம் விடைபெற்று கிச்சனுக்குள் சென்றாள். அவளுக்காக ஒதுக்கிய அடுப்பிற்கு சென்றவள் வந்தனா என்ன செய்கிறாள் என பார்த்து மிரண்டாள். 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.