“டிவி ரிமோட் அங்கே தான் இருக்கும். எடுத்து வால்யூமை குறை அருண்,” என பதிலுக்கு சத்தமாக சொன்னாள் சத்யா.
“இல்லை ஆன்ட்டி, அக்கா ரிமோட்டையும் மாடிக்கு எடுத்துட்டு போனாங்க,” என அருண் சொல்லவும்,
“மாடிக்கு எதுக்கு அவ ரிமோட்டை எடுத்துட்டுப் போனா? அங்கே இருந்து டிவி பார்க்கவா போறா?” எனக் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்த சத்யாவின் விழிகள் திடீரென்று மனதில் தோன்றிய யோசனையில் விரிந்தது!
“சக்தி! ரிமோட் பத்தி நாம யோசிக்கவே இல்லையே?” சத்யா கேள்வியும், ஆர்வமும் கலந்து சக்தியிடம் கேட்டாள்.
❀✿❀✿❀✿
வினாயக் ஜீப்பில் இருந்து இறங்கி கீழே நின்றான். சக்தியும், சத்யாவும் ஜீப்பில் இருந்துக் கொண்டே தங்களுக்குள் மெல்லிய குரலில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வினாயக் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் ஃபோனை எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்தான். ப்ரியம்வதாவிடம் இருந்து நூற்றுக் கணக்கான அழைப்புகள் வந்திருப்பதை மொபைல் அவனுக்கு சொன்னது!
சின்ன புன்னகை தோன்ற, தலையை கோதி விட்டுக் கொண்டே ப்ரியம்வதாவின் மொபைல் நம்பரை அழைத்தான்.
இரண்டாம் ரிங் தொடங்கும் முன்பே ப்ரியம்வதா அழைப்பை ஏற்றாள். வினாயக் வாயை திறக்கவும் அனுமதிக்காமல் அவள் மூச்சு விடாமல் பேசினாள்.