“நல்லா தான் கேள்வி கேட்குற சக்தி! டெலிவரியே முடிஞ்சிருச்சு, அப்புறம் என்ன பயம்? அதும் அஹல்யா உன் விஷயம்னா அபினவை அங்கே இருக்க விட மாட்டா. ஆனாலும் கவலைப் படாதே அபினவோட அக்கா, அப்பா எல்லோரும் வந்திருக்காங்க!”
“இதை முதல்ல சொல்லாம, சிரிப்பு வேற! என்னை நக்கல் அடிக்குறதுல உனக்கு ஒரு தனி சந்தோஷம்??” என்ற சக்தி அப்போது தான் வினாயக் பக்கத்தில் ப்ரியம்வதா இருப்பதை கவனித்தாள். அவர்கள் இருவரும் தங்களுக்குள் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தாரகள்.
“சத்யா, அபினவ்க்கு ஃபோன் போடு. சீக்கிரமா வரச் சொல்லு. வினாயக் எதையாவது ப்ரியம்வதா கிட்ட உளறி வச்சா நம்ம ப்ளான் வேஸ்ட்டா போயிடும்!”
வினாயக் பக்கம் பார்த்து விட்டு மொபைலை கையிலெடுத்தாள் சத்யா. அதற்குள் பைக்கில் வேகமாக அங்கே வந்து சேர்ந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
அபினவ்!
“இது அன்பில்லைடா தம்பி, அஹல்யா சக்தி பேரை குழந்தைக்கு வச்சதோட எஃபக்ட்! சரி, அதெல்லாம் அப்புறம். நான் சொல்றதை கவனமா கேட்டுட்டுப் போய் வீட்டுக்குள்ளே கலைவாணி இருப்பாங்க, அவங்க கிட்ட பேசு,” என்றாள் சத்யா!
“ஓகே சத்யாக்கா. நான் லீவுல இருக்கேன். உங்களுக்காக தான் பேசுறேன். தேன் சாருக்கு தெரிஞ்சா நான் அவ்வளவு தான். எதுவும் பிரச்சனை வந்திராதே?”