“நீ எங்கே இருக்க வினாயக்? நான் உன்னை பார்க்கனும். ஒரு வாரமா உன்னை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை, கொடுமையா இருந்துச்சு தெரியுமா?”
“உனக்கு என்னை பார்க்கனும் அவ்வளவு தானே? உங்க வீட்டு வாசல் தெரியுற மாதிரி ஏதாவது ஜன்னல் வழியா எட்டிப் பாரு, நான் காட்சி தருவேன்!”
“விளையாடாதே வினாயக்!”
“நீ பக்கத்துல இல்லாம நான் யாரோட விளையாட? சொல்றதை செய்யேன்!”
வினாயக் அந்த பெரிய கட்டிடத்தில் தெரிந்த ஜன்னல்களை ஆர்வத்துடன் நோக்கினான். மாடியில் இருந்த ஜன்னலில் இருந்து கை தெரியவும், வினாயக்கும் கை அசைத்தான்.
“சைன்ட்டிஸ்ட் சார்? என்ன தனியா கையை ஆட்டிட்டு இருக்கீங்க? ஏற்கனவே உங்களை சைக்கியாட்ரிஸ்ட்க்கு அனுப்பின குடும்பம் இது ஞாபகம் இருக்கா?” சத்யா கிண்டல் செய்கிற
...
This story is now available on Chillzee KiMo.
...
ாணோம்??” என சொல்லி, சக்தி அவர்கள் வந்த சாலையில் வேறு வாகனம் வருகிறதா எனப் பார்த்தாள்.
“கவலைப் படாதே சக்தி, அவன் வந்திருவான். பையன் பிறந்த சந்தோஷத்துல இருக்கான். அஹல்யாவையும் குட்டி பாய் சக்தியையும் விட்டுட்டு வரணுமே, அதான் லேட் செய்றான்,” என்றாள் சத்யா.
“அபினவ் வந்தா அஹல்யா தனியா இருப்பாங்களா?” என சக்தி அக்கறையுடன் வினவவும், சத்யா சிரித்தாள்!