(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

   

“எங்கே போயிட்ட வினாயக்? ஒரு வாரத்துல வரேன்னு சொல்லிட்டு வேற ஒன்னுமே நீ சொல்லவே இல்லையே?? வீட்டுல அம்மா எனக்கும் ஸ்ரீனிவாஸுக்கும் நிச்சயதார்த்தம் அரேன்ஜ் செய்திருக்காங்க. எவ்வளவு சொன்னாலும் கேட்கவே இல்லை. ஸ்ரீனிவாஸ் இப்போதைக்கு பேருக்கு இருக்கட்டும்னு சொல்லி இருக்கார். நான் என்ன செய்ய வினாயக்?”

   

“ப்ரியூ, எதுக்கு இவ்வளவு டென்ஷன்? உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் கூட தான். நிச்சயதார்த்தமா இருந்தாலும் கூட என்னோட தான்!” அமைதியாக பேசி ப்ரியம்வதாவை சமாதானப் படுத்த முயன்றான் வினாயக்.

   

“நீ ஈஸியா சொல்ற. எனக்கு பயமா இருக்கு வினாயக்!”

   

“என்ன நீ, இப்போ எல்லாம் எதுக்கு எடுத்தாலும் பயமா இருக்கு இருக்குன்னு சொல்ற? எனக்கு தெரிஞ்ச அந்த பழைய தைரியசாலி சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் ப்ரியம்வதா எங்கே?? தைரியமா இரு ப்ரியூ. நான் அம்மா கிட்ட பேசுறேன்.”

   

“உண்மையா பேசப் போறீயா?”

   

“என் மேல ப்ராமிஸ் போதுமா? உனக்கு நிச்சயதார்த்தம் நடக்க ப்ளான் செய்திருக்க நாள்ல நம்ம கல்யாணமே நடந்தா கூட நடக்கலாம்!”

   

“சும்மா பேச்சுக்குன்னு சொல்லாதே. நாளைக்கு தான் அவங்க சொல்லி இருக்க டேட்.”

   

“ரொம்ப நல்லதா போச்சு. நாம உடனே கல்யாணம் செய்துக்கலாம். எனக்கு பொறுமையே கிடையாது.”

   

ப்ரியம்வதா அமைதியாக இருந்தாள்.

   

“என்ன சத்தமே காணும்? ப்ரியூ?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.