நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் சரவணன் மாறிப் போயிருப்பது போலவே அவனும் ப்ரியாவிற்காக மாறிப் போவானோ?
ப்ரியாவின் பெயரை சுருக்கி செல்லமாக என்ன என்று அழைப்பது?
ப்ரி!!!
ப்ச்... அது எல்லோரும் சொல்வது!
முக்கியமான ஆராய்ச்சியில் இருந்தவனின் பார்வையில் செல்ஃபோன் பட்டது. மீண்டும் அதில் ப்ரியாவை அழைத்தான்! அப்போதும் அவள் அவனின் அழைப்பை ஏற்கவில்லை.
அப்போது மட்டும் இல்லாமல், தொடர்ந்து, இடைவெளி விட்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என அவன் அழைத்தப் போதும் அவள் அழைப்பை ஏற்கவே இல்லை!
ப்ரியாவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என சிறிதாக விக்கிராந்தினுள் மலர்ந்திருந்த ஆசை, நேரம் செல்ல செல்ல, சுனாமியாக மாறி அவனை ஆட்டிப் படைத்தது!
பெரியவர்கள் தொடங்கி வைத்திருக்கும் திருமண பேச்சை மட்டும் சொல்லிக் கொண்டு ப்ரியாவை சந்திக்க முடியாது. அதில் அவளுக்கு விருப்பம் இருப்பதாக தெரியவில்லை!
வேறு ஏதாவது காரணம் வேண்டும்!
"விக்கி, அந்த ஆன்சைட் ரோலுக்கு அஞ்சு ரெஸ்யூமே ஷேர் செய்திருந்தேனே, பார்த்தீயா? இன்னைக்கு யாராவது ஒருத்தரை ஷார்ட் லிஸ்ட் செய்தே ஆகனும். ரொம்ப க்ரிட்டிக்கல்!"
பக்கத்துக்கு க்யூபில் இருந்து எட்டிப் பார்த்து ஜான்வி பேசியதில் விக்கிராந்திற்கு புதிய ஐடியா ஒன்று தோன்றியது!
"ஒன் செகண்ட் ஜானு," என தோழியிடம் சொல்லி விட்டு, க்யூபில் இருந்து எழுந்து சரவணன்