(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

சஞ்சீவ் திகைப்புடன் இந்துவைப் பார்த்தான்! அவனுக்கு அவனின் கன்டிஷன்கள் மறந்தெல்லாம் போகவில்லை. ஆனால் அதை இந்து ‘100% ஸ்ட்ரிக்ட்’ ஆக பின்பற்றுவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் முன்னிலையில் பேசா விட்டாலும் அவனுக்கு தெரியாமல் அவள் பேச வழிகளா இல்லை! அவள் ஃபோனில் பேசினால் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே!

   

கண்மணி இந்து அறை உள்ளேயே இருப்பது பற்றி சொன்னது அவனின் நினைவில் வந்தது... இது தானா காரணம்?

   

அர்ச்சனா மீது இந்துவிற்கு இருக்கும் அன்பு அவனுக்கு தெரிந்தது தான். ஆனாலும் அவன் சொன்ன ஒரே காரணத்திற்காக பேசாமல் இருக்கிறாளே!!! ஒரு பக்கம் அர்ச்சனாவிற்காக வருத்தமாக இருந்தாலும், மனதில் ஒரு வித மகிழ்ச்சி பரவுவதையும் அவனால் உணர முடிந்தது. அவன் மனைவி பிடிக்காத விஷயத்தை கூட அவனுக்காக செய்கிறாளே.... மின்னல் வேகத்தில் இவை எல்லாம் சஞ்சீவின் மனதில் ஓடினாலும் அவன் பேச்சில் இதை எதையும் காட்ட விரும்பவில்லை!

   

"இதைப் பத்தி எல்லாம் ரொம்ப நாளுக்கு முன்னாடியே தெளிவா பேசி நாம முடிவு செஞ்சாச்சு தானே," என்றான் கறாரானக் குரலில்.

   

"இல்லை.... வந்து..."

   

"உன்னோட ஆமாம், இல்லை எல்லாம் எனக்கு தெரிய வேண்டாம்... பேசி முடிவு செய்த விஷயம்... அன்னைக்கே நல்லா யோசிச்சு தானே உன்னை முடிவு எடுக்க சொன்னேன்... இப்போ பேச எதுவும் இல்லை...." என்றப்படி கதவை மூடினான் சஞ்சீவ்.

   

கதவின் மறுபுறம் நின்றிருந்த இந்துவிற்கு, முகத்தில் அறை வாங்கியது போல் அவமானமாக இருந்தது. மெதுவாக நடந்து அவளின் பகுதிக்கு வந்த

{/f90filter}ு கட்டிலில் அமர்ந்தவளுக்கு வருத்தம் அலை மோதியது! ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், திடீரென ஒரு ஐடியா தோன்றவும், கடிகாரத்தில் நேரத்தை ஒரு முறை பார்த்து விட்டு, தன் மொபைலை எடுத்து, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.