(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

நினைவே நிறைவாக இருந்தது. காலையிலேயே இந்துவை அழைத்து நேராகவே பேசி விடலாம் என நினைத்தப் போது,  சஞ்சீவ் அவளின் மொபைலில் அழைத்தான். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவன், அர்ச்சனாவின் வருத்தம் புரிந்தவனாக இந்துவின் மொபைலில் ஏதோ பிரச்சனை என்று பொய்யும் சொன்னான்.

   

அவனின் பொய்யை ஏற்றுக் கொண்டு மாலை வரை காத்திருந்த அர்ச்சனா, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் நேராக கிளம்பி காஞ்சனா வீட்டிற்கே வந்தாள்.

   

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி இருந்த ராஜீவும், சஞ்சீவும் அன்றைய மாலை சிற்றுண்டி பஜ்ஜியை சுவைத்தப் படி கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனாவை மகிழ்ச்சியுடன் வரவேற்ற காஞ்சனா அன்புடன் அழைத்து அமர்ந்துப் பேச சொன்னாள். அப்படியே கண்மணியை அழைத்து அர்ச்சனா வந்திருப்பதை இந்துவிடம் சொல்லவும் சொன்னாள்.

   

கண்மணி அழைக்கும் குரல் கேட்டப் போதும் இந்துவிற்கு கீழே செல்ல விருப்பம் இருக்கவில்லை. ஏற்கனவே கீதா ஒரு முறை அவளை அழைத்தாகி விட்டது! இதற்கு பிறகும் போகவில்லை என்றால் சரியாக இருக்காது என்று வேண்டா வெறுப்பாக மாடியில் இருந்து வந்தவள், அங்கே அர்ச்சனாவை பார்த்தவுடன் சந்தோஷத்தில் தன்னை மறந்தாள்! வேகமாக வந்ததில் வழியில் இருந்த டீப்பாயில் காலை இடித்துக் கொண்டாள். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அம்மாவின் பக்கத்தில் சென்று அமர்ந்து, அணைத்துக் கொண்டு,

   

"ஹாப்பி பர்த் டே அம்மா...." என்றாள்.

   

"காலையிலே இருந்து நீ ஃபோன் செய்வேன்னு வெயிட் செஞ்சேன்!! கல்யாணம் ஆனா இப்படியா அம்மாவை மறந்துப் போறது?"

   

அர்ச்சனா மகளை ஆராய்வதுப் போல பார்த்துக் கொண்டே தான் கேட்டாள்!

   {/f90filter}>

"இல்ல அம்மா என் ஃபோன் ரிப்பேர்," என வாயில் வந்த பொய்யை சொன்னாள் இந்து. 

   

"தெரியும், சஞ்சீவ் சொன்னார்," என்று அர்ச்சனா சொல்லவும், இந்து திகைத்துப் போய் சஞ்சீவ் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.