(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

 🌼🌸❀✿🌷

   

அடுத்து வந்த தினங்களில் அந்த வீடு தலை கீழாக மாறிப் போனது! கீதாவிற்கும் காஞ்சானாவிற்கும் நடுவில் எப்போதுமே வலுவான உறவு இருந்தது என்றாலும், கீதா தன் கணவனின் அம்மா என்ற முறையில் காஞ்சனாவை சற்று மேலே வைத்து மரியாதையுடனே தான் நடத்தினாள். ஆனால் இந்து அதற்கு நேரேதிராக நடந்துக் கொண்டாள். ஒரு மகள் தன் அம்மாவிடம் எப்படி கொஞ்சுவாளோ, பேசுவாளோ, அதே போல் தான் காஞ்சனாவிடம் பழகினாள். காஞ்சனாவிற்கும் அது பிடித்திருந்ததால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்துவின் கலகலப்பான பேச்சும், அன்பும், பரிவும், காஞ்சனாவை மட்டும் அல்லாமல் கீதா, கண்மணி, கலா என அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.

   

 சஞ்சீவ் சொன்னதற்காகவோ என்னவோ, இந்து இப்போதெல்லாம் மும்முரமாக சமையல் கற்றுக் கொள்ளும் வேலையிலும் இறங்கி இருந்தாள். சமையலறையில் அவள் செய்யும் சிறு சிறு தவறுகளை மற்றவர்கள் கேலி செய்தப் போது, எந்த வித முக சுளிப்பும் இல்லாது அவள் ஏற்றுக் கொண்ட பாங்கு கலாவை நெகிழ்த்தி இருந்தது! 

   

ஒரு நாள் அவரைக்காய் பொறியல் செய்துக் கொண்டிருந்த கீதா ஏதோ வேலையாக வேறு பக்கம் செல்ல வேண்டி இருந்தது. அதனால் இந்துவிடம் பொரியலை சிறிது நேரம் கிண்டி விட்டு, அதை இறக்கும் நிலை பற்றி விளக்கம் கொடுத்து விட்டு சென்றாள். இந்துவும் ஆர்வத்துடனே பொரியலை கிண்ட தொடங்கினாள்! ஆனால் கீதா சென்று பல நிமிடங்கள் ஆனப் போதும், பொறியலில் எந்த மாற்றம் வந்ததாக காணும்!

   

 பொறுமை இழந்த இந்து கடைசியில் கலாவை அழைத்தாள். தோட்டத்தில் ஏதோ வேலையில் இருந்த கலா, இந்து சொல்வதை கேட்டு விட்டு கேஸ் அடுப்பின் அருகில் சென்று பார்த்தாள்! பார்த்தவள், விழுந்து விழுந்து சிரித்தாள்! இந்துவிற்கு ஒன்றும் புரியவில்லை.

   

 "ஹலோ கலா மேடம், விஷயத்தை சொல்லிட்டு சிரிச்சா நானும் சிரிப்பேன் தானே?"

   

 "ஏன் அண்ணி பொறியல் செய்ய அடுப்பை பத்த வைக்க வேண்டாமா?" என்று விட்டு மீண்டும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.