“என்னது கடுகா??? அதுக்கு இப்படி இளிப்பு வேறயா???”
“ஆமாம் உங்க முகத்தில் போட்டா கடுகு வெடிக்கும் போலிருக்கே, போட்டு பார்க்கலாமேன்னு நினைச்சேன்...”
“ஹேய்....”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் அருகே சென்று அவனின் சட்டை காலரை இரண்டு கைகளால் கொத்தாக பிடித்த சுமித்ரா,
“என்ன ஓவரா மிரட்டுறீங்க???” என்றாள் கெத்தாக.
அது வரை இருந்ததற்கு தலை கீழாக மாறி போனது கமலின் முகம்.
“யாரு நானா மிரட்டுறேன்? என் காலரை பிடிச்சுட்டு சொல்றீயே, இது நியாயமா???” என்றவனின் குரலும் குழைந்து ஒலித்தது.
அவனின் அந்த மாறி போன முகபாவம் அவளுக்கு பழகி போனது என்பதால்,
“என் கமல், நான் காலரை பிடிச்சு இழுப்பேன், காதை திருகுவேன்... என்ன வேணா செய்வேன்...” என்று செல்லம் கொஞ்சினாள் அவள்.
“ஹம்மாடியோ... இதெல்லாம் வேற பிளான்ல இருக்கா....! ஆனாலும் என் சுமிக்கு இல்லாத உரிமையா!”
“அதானே!!!! ஆமாம் ஏன் இப்படி வந்து கத்துறீங்க???”
“ஹையோ சுமி, நான் பார்த்ததை நீ பார்க்கலை....”
“பார்க்கலைனா என்ன? என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியும். கவிதாவே சொன்னா...”