(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“அவ சொன்னது உண்மைன்னு உனக்கு எப்படி தெரியும்...”

   

“தெரியும்!!! அவ்வளவு தான்... கவிதா ரொம்ப நல்ல பொண்ணுங்க...”

   

“ப்ச்...”

   

“தேவையே இல்லாம யோசிச்சு கோபப் படுறீங்க நீங்க...”

   

“எல்லாம் அவ நன்மைக்காக தான் சுமி....”

   

“எனக்கு புரியுது... ஆனா அவங்க யாருக்கும் புரியலையே...! உங்களை கோபக்காரர்ன்னு என் கிட்டேயே சொல்றாங்க... மத்தவங்களை விடுங்க, அத்தை கூட உங்களை ஹிட்லர்ன்னு தான் நினைக்குறாங்க...”

   

“நினைச்சுட்டு போகட்டும் விடு...”

   

“ப்ச்... நீங்க ஈசியா சொல்றீங்க... எனக்கு கஷ்டமா இருக்குங்க...”

   

“சுமி செல்லம், இந்த குடும்பத்துக்கு அப்பாவா இருக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு...”

   

“ம்ம்ம்ம்...” என்றபடி அங்கே இருந்த ஷோஃபாவில் அமர்ந்தாள் சுமித்ரா.

   

அதற்காகவே காத்திருந்தவனைப் போல அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் கமல்.

   

“என்ன ஹிட்லர் சார்? தாம் தூம்னு குதிச்சுட்டு இங்கே வந்து இப்படி ரிலாக்ஸ்டாக இருக்கீங்க?”

   

கேட்டாளே தவிர சுமித்ராவின் விரல்களும் கணவனின் கேசத்தை கோதியபடி தான் இருந்தன...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.