“அந்த கமல் வேற, இந்த கமல் வேற...”
“ஹ்க்கும்...! ப்ச்... எனக்கு உங்களை எல்லாரும் ஹிட்லர் அது இதுன்னு சொல்றது பிடிக்கலை...”
“சுமி கண்ணா, எத்தனை தடவை இதை பத்தி நாம பேசியாச்சு... உனக்கு தெரியாததில்லை... என் தம்பி இப்போ எப்படி உத்தம புத்திரன் மாதிரி இருக்கான்... ஒரு பத்து வருஷம் முன்னாடி அவன் எப்படி இருந்தான் தெரியுமா? ரவுடி மாதிரி இருந்தான்... அவனை நான் மட்டும் அன்னைக்கு தட்டி வைக்காமல் விட்டிருந்தா...”
“ஹையோ போதும் போதும்... விடுங்க உங்க கதையை... அவருக்கு உங்களை விட ஒரே ஒரு வயசு தானே கம்மி... நீங்க சொல்றதை பார்த்தா ஓவரா தெரியுது...”
“அந்த ஒரு வயசு வித்தியாசத்தால தான் நான் பாட்டி வீட்டுல வளர வேண்டியதா போச்சு... எங்க அம்மாவால ஒரே நேரத்துல இரண்டு பேரையும் கவனிக்க முடியலையாம்... அதனால தானோ என்னவோ அவங்களுக்கும் என்னை பத்தி தெரிய மாட்டேங்குது... என்னை பத்தி நல்லா தெரிஞ்ச, புரிஞ்ச ஒரே ஆள் நீதான் சுமி...”
“என்ன ஒரே ஆள் நீ தான்னு இப்படி சோகமா சொல்றீங்க? எத்தனை ஆள் வேணும் உங்களுக்கு?”
“வேற யாரும் வேண்டாம்... என் சுமி மட்டும் தான் வேணும்... உன்னை மஹாராணி போல வச்சு பார்க்க ஆசையா இருக்கு... கவி கல்யாணம் மட்டும் முடியட்டும்... அப்புறம் பாரு...”
“அப்புறம் மட்டும் என்ன ஆகும்? ஒன்னும் ஆகாது...”
“உனக்கு பிடிச்ச மாதிரி பெரிய வீடா தனி வீடா கட்ட தனியா காசு சேர்த்து வச்சுட்டு இருக்கேன்... இந்த வீடை முழுக்க தம்பிக்கே கொடுத்திடலாம்...”
“ஹ்ம்ம்... ப்ளான் எல்லாம் நல்லா தான் இருக்கு...”