தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“தேங்க்ஸ் நந்திதா...” என்றப்படி மொபைலை நந்துவிடம் நீட்டினான் உதய்.
“நாம கிளம்புவோமா உதய்? நமக்கு வேண்டிய டீல் அல்மோஸ்ட் கிடைச்சாச்சு... இனி மத்த விஷயங்களை பத்தி பேசி, ப்ளான் செய்வது தான் சரி,” என்றாள் நாகு.
“யெஸ் நாகு! அது தான கரக்ட்... பட் இன்றைய ஸ்பெஷல் டேவை நாம செலிபரேட் செய்தே ஆகனும்... மூணு பேரும் டின்னர் போவோமா?”
நாகுவும், நந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அதை கவனித்து, “என்ன ஆச்சு? வேற ஏதாவது ப்ளான் வச்சிருக்கீங்களா?” என வினவினான் உதய்.
“இல்லை, நாங்க உங்களை இன்வைட் செய்யலாம்னு நினைச்சோம், நீங்க அதையே சொல்லிட்டீங்க...”
“கிரேட்... எங்கே போகலாம் சொல்லுங்க?”
“எனக்கு எந்த நல்ல ரெஸ்டாரன்ட்டும் ஓகே... நந்திதா உனக்கு?”
“எனக்கும் ஓகே... ஆனால் இது ரொம்ப சீக்கிரம் போலருக்கே...” என்றாள் நந்திதா.
“அதைப் பத்தி கவலையே படாதே, உதய் பத்தி உனக்கு தெரியாது... இன்னைக்கு டின்னர் முடியுறதுக்குள்ள க்றிஸ் கிட்ட ஷேர் செய்ய மொத்த திட்டமும் நம்மக் கிட்ட பேசி ரெடி செஞ்சிருவார்,” என்றாள் நாகு புன்னகை மின்ன!
உதயும் சிரித்துக் கொண்டே, “ஹேய் நாகு, அப்படி ஒரு ப்ளான் இல்லை... பட் இப்போ யோசிக்கும் போது அதுவும் கூட நல்ல ஐடியாவா தான் தோணுது... வாங்க கிளம்பலாம்...” என்றான்.