“பரவாயில்லை நாகு, உங்க வீடு ரொம்ப தூரம் ஒன்னும் இல்லையே... நானே ட்ராப் செய்றேன்...”
“உங்களுக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா வேலை?”
“ஹுஹும்... அதெல்லாம் ஒண்ணுமில்லை...”
“அப்போ சரி உதய்,” என நாகு ஏற்றுக்கொள்ளவும், உதய் நந்திதாவை பார்த்தான்.
“நாகுவை ட்ராப் செய்ங்க உதய், நான் ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்...” என்றாள் நந்திதா.
“நோ நோ அது சேஃப் இல்லை... நானும் பெரியம்மா வீட்டுக்கு வந்தே ரொம்ப நாள் ஆச்சு...”
“ஓ... அப்போ சரி...!”
உதய்யே மூன்றுப் பேருக்கும் சேர்த்து பில் செட்டில் செய்து விட, மூவரும் ஒன்றாகவே பார்க்கிங்கை அடைந்தார்கள்... ஹோட்டலுக்கு வந்த போது நாகு முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். இப்போதும் அதையே நினைத்து நந்திதா பின் கதவை திறக்க, நாகு அவளை தடுத்து நிறுத்தினாள்.
“நீ ஃப்ரன்ட் சீட்டுல உட்காரு நந்திதா... நான் முதல்ல இறங்கிடுவேன், அப்புறம் நீ பின்னாடி சீட்டுல உதய் டிரைவர் சீட்ல இருந்தா நல்லா இருக்காது...”
சரி என்று தோன்றவும் நந்திதா சிறு தயக்கத்துடன் முன் இருக்கையில் அமர்ந்தாள்.
உதய் இது எதையும் கவனிக்காதவன் போல் கவனித்துக் கொண்டிருந்தான்...
நந்திதாவிடம் தோன்றி மறைந்த அந்த மெல்லிய தயக்கம் அவன் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.