(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

சரி தான் மேடம் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்!!!!

   

❀✿❀✿❀✿

   

நாகலட்சுமியை அவளின் வீட்டின் கேட் அருகே இறக்கி விட்டு விட்டு நந்திதாவும், உதயும் சரத் வீட்டினை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள்...

   

முதல் சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தது...

   

பின் நத்திதா அவளுக்கு பழக்கமில்லாத தயக்கத்துடன் பேசினாள்.

   

“உதய், உங்க கிட்ட நான் சாரி சொல்லனும்...”

   

“சாரியா ஏன்?”

   

“மார்னிங் என்னை அமைதிப் படுத்த பேசிட்டு இருந்தீங்க, ஆனால் நான் அப்படி சட்டுன்னு கையை இழுத்து... சாரி அப்படி செய்திருக்க கூடாது.... உங்களை தப்பா நினைச்சு செய்யலை...”

   

நந்திதா தட்டு தடுமாறி சொல்லி முடிக்க, உதய் சாலையில் இருந்து பார்வையை திருப்பி அவள் பக்கம் பார்த்தான்...

   

“ஏன் தப்பா நினைக்கலை????”

   

என்ன கேள்வி இது என்று புரியாமல் விழித்தாள் நந்திதா!

   

“என்னை பத்தி உங்களுக்கு பர்சனலா எதுவுமே தெரியாதே, நான் ரொம்ப கெட்டவனா கூட இருக்கலாம்... உங்களை மாதிரி விழிப்போடு இருக்கிறது தப்பில்லை...”

   

தப்பில்லையா!!! விழிப்புடனா??? அவளா??? ஆனால் அவளுக்கு அவனின் கை அவள் கையின் மீது இருப்பதே வெகு தாமதமாக தானே தெரிந்தது???

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.