“யாரு அது மைத்ரேயி மேடம்???”
“ஓ! உன் கிட்ட நான் சொல்லலையா? சேகர் சார் அறிமுகப் படுத்தி வச்சார்.... ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி ஆனால் நம்ம ‘ஜி.எஸ்’ விட பெரிசா தனியா நடத்திட்டு இருக்காங்க...”
“ஓ...! அவங்க மட்டும் தனியாவா நடத்துறாங்க?”
“ஆமாம் சரண்... செம போல்ட் லேடி... டேலன்ட் ஆனவங்களும் கூட... வாய்ப்பு கிடைச்சா உன்னையும் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்... உன்னை அவங்களுக்கு பிடிக்கும்... உனக்கும் அவங்களை பிடிக்கும்...”
“ம்ம்ம்... அவங்க கம்பெனிக்கு ஏதாவது ஆர்டர் கொடுத்தாங்களா??”
“இல்லை டா... அவங்க கம்பெனி ரிலேட்டடா இப்போ நாம எதுவும் செய்யலை... ஆனாலும் பெங்களூருல இருந்து வந்த உடனே அதை பத்தி யோசிக்கனும்... அவங்களை போல இருக்கவங்க கூட பிஸ்னஸ் கிடைச்சா நம்ம லக்...”
“சரி சரி... அதெல்லாம் அப்புறம் பேசலாம்... இப்போ சாப்பிடுட்டுட்டு கிளம்புங்க... ரொம்ப லேட் ஆச்சு...! இப்போ கிளம்பினா கூட நீங்க விகாஸ் வீட்டுக்கு போக ஒரு மணி மேல ஆகிடும்...”
“ஆமாம்... நாளைக்கு பத்து மணிக்கு அந்த கம்பெனில இருக்கனும்...” என்ற கோபி அதன் பின் பேசிக் கொண்டு நிற்காமல் சுறுசுறுப்பாக கிளம்பினான்.
மனைவி பரிமாறிய உணவை அவசரமாக முடித்தவன், பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப தயார் ஆனான்...
“கதவை நல்லா பூட்டிட்டு தூங்கு சரண்... தெரியாதவங்களுக்கு கதவை திறந்து விடாதே... பத்திரம்...”