இது கிட்டத்தட்ட தினம் தினம் அவன் அவளிடம் சொல்வது தான்!
ஆனால் அதன் பின் இருக்கும் அவனின் அக்கறை புரிந்ததால், அமைதியாக,
“சரிங்க....” என்றாள் அவள்.
“செல்வியம்மா கிட்ட சொல்லிட்டு போறேன்... ஏதாவது உதவி வேணும்னா யோசிச்சிட்டு இருக்காம, அவங்க கிட்ட கேளு... புரியுதா???”
“ம்ம்ம்...”
“அவங்களையே பால் வாங்கி தர சொல்லிட்டேன்... கடைல இருந்து ஏதாவது வாங்கனும்னா ஃபோன் செய்து எடுத்துட்டு வர சொல்லு... தேவை இல்லாமல் நீ போய் அலையாதே...”
சரண்யாவிற்கு கோபியிடம் மிகவும் பிடித்ததே இந்த பிரத்தியேகமான அன்பும், அக்கறையும் தான்...
“எல்லாம் இருக்குங்க...” என்றாள் மெல்லிய புன்னகை மின்ன!
“குட்... இரண்டே நாள்ல வந்திருவேன்... சரியாடா...”
“ம்ம்ம்...”
குனிந்து மனைவியின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்ட கோபி,
“எதையாவது யோசிச்சிட்டு இருக்காம, ஒழுங்கா இரு... சரியா?” என்றான்.
“ம்ம்ம்ம்...”
சரண்யாவின் கையில் இருந்த நிஷாவை வாங்கி செல்லம் கொஞ்சினான் கோபி.