(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

   

“பாப்பா குட் கேர்ள் ஆக இருக்கனும்... அம்மாவை ஒழுங்கா பார்த்துக்கனும் சரியா...”

   

குழந்தைக்கு என்ன புரிந்ததோ, அவனை கட்டிக் கொண்டது...

   

“என் செல்ல பாப்பாடா நீ...” என்று கொஞ்சியவன், சில நிமிடங்களுக்கு பின் ஒருவழியாக மனமே இல்லாமல் கிளம்பினான்...

   

“வரேன் சரண்...”

   

“ம்ம்ம்... மெதுவா காரை ஓட்டிட்டுப் போங்க... வழில டைம் கிடைக்கும் போது ஃபோன் செய்ங்க...”

   

“சரி சரண்... கிளம்புறேன்...” என்றபடி காரில் ஏறிய கோபி, மனைவியையும், மகளையும் பார்த்து கை அசைத்தான்...

   

சரண்யாவிடம் எப்போதும் இருக்கும் புன்னகையையும், நிஷாவிடம் அவனை பார்க்கும் போதெல்லாம் வரும் அந்த மழலை சிரிப்பையும் காரில் இருந்த படியே பார்த்து ரசித்தான்...

   

புன்னகையுடன் அவனுக்கு பதிலாக கை அசைத்தவர்களை கண்களிலும், நினைவிலும் நிரப்பிக் கொண்டு, காரைக் கிளப்பினான்...

   

❀✿❀✿❀✿

   

நெடுஞ்சாலையில் காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்த கோபி, மறுநாள் சந்திக்க போகும் நபரிடம் என்ன விபரங்கள் கேட்க வேண்டும், என்ன விபரங்கள் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தப் படி இருந்தான்...

   

வார நாள் என்பதால் அதிகமான போக்குவரத்து இல்லை... அவ்வப்போது ஒன்றிரண்டு கார், பஸ்கள் தான் தென்பட்டன...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.