Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 02 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அடுத்து சிவசங்கரன் வந்து தன் மனைவியின் பக்கத்தில் நெருக்கமாக அமர அவரோ வேண்டுமென்றே விலகி ஒரு அடி நகர்ந்து அமர அதைக் கண்டு சிரித்தவரோ தன் மனைவியின் தோளில் கையை போட்டு இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவர்
”கோபமா” என அன்பாக கேட்க
”போங்க அந்தப் பக்கம், எனக்கு யார் மேலயும் கோபம் இல்லை“ என கோபமாகச் சொல்லி அவரை விட்டு விலகிச் செல்ல முயன்றவரை தடுத்து தன்னுடனே அமர்த்திக் கொண்டவர்
”சம்யுக்தா மேல உனக்கிருக்கற கவலையை விட எனக்கு ஆயிரம் கவலைகள் இருக்கு”
”இருக்கா உங்களைப் பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே”
”ஏன் அப்படி சொல்ற”
”பின்ன கவலையிருந்தா மதுரையில அவளை கட்டிக்கொடுப்பீங்களா என்ன, ஏன் இந்த சென்னையில மாப்பிள்ளையே கிடைக்கலையா உங்களுக்கு” என ஆதங்கப்பட அவரோ
”இருக்காங்க ஆனா, இளங்கோவன் நல்லவன் கல்யாணத்துக்கப்புறம் நம்ம பேச்சைக் கேட்பான்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு, அதான் அவனை பேசி முடிச்சேன் போதுமா“
”எனக்கு கஷ்டமாயிருக்குங்க”
”உனக்கு இளங்கோவனை பிடிக்கலையா என்ன”
”நான் மாப்பிள்ளையை எதுவும் சொல்லலைங்க, பொண்ணு தூரமா போகுதேன்னுதான் வருத்தமா இருக்கு”
”உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப உன் அப்பா கொஞ்சம் கூட வருத்தப்படலை, என் மேல அவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தாரு, நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன்னு நம்பி கண்